NASSCOM அமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் Startup Warehouse-ஐ சென்னையில் அமைத்துள்ளது
NASSCOM அமைப்பு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து Startup Warehouse-ஐ சென்னை தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் மார்ச் 1, 2016-யில் தொடங்கியுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த Startup Warehouse-ஐ நாஸ்காம் அமைத்துள்ளது. 8000 சதுர அடி வேர்ஹவுசில் 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குபெற அனுமதிக்கப்படுகிறது.

நாஸ்காம் மற்றும் தமிழக அரசின் மூலம் தேர்ந்தெடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்னை ஸ்டார்ட் அப் வேர்ஹவுசில் அனுமதிக்கப்படும். தொழில்முனைவோர்கள் பல்வேறு உதவிகளை ஸ்டார்ட் அப் வேர்ஹவுசின் மூலம் பெற முடியும்.
PLEASE READ ALSO: தொடக்க நிறுவனங்கள் வளர்வதற்கு உதவும் PayPal இந்தியாவின் Start Tank இன்குபேட்டார் சென்னையில்
ஸ்டார்ட் அப் வேர்ஹவுசில் ஆரம்ப கட்ட வழிகாட்டுதல் (mentoring), அலுவலக இடம், அகண்ட அலைவரிசை சேவைகள்,உள்கட்டமைப்பு வசதிகள், அமர்வுகள் (sessions), பயிற்சிகள், Google, Amazon, Microsoft, IBM cloud, Kotak மற்றும் பல பெரிய நிறுவனங்களின் சேவைகள் போன்றவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற முடியும். ஸ்டார்ட் அப் வேர்ஹவுசில் 6 முதல் 12 மாதகாலத்திற்கு பயன்களை பெற அனுமதிக்கப்படும்.