மைக்ரோசாப்ட் நிறுவனம் சமூக வலைத்தளமான LinkedIn-ஐ $ 26.2 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது
Microsoft அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகும். Microsoft நிறுவனம் கணினி மென்பொருள், நுகர்வோர் மின்னணு பொருட்கள் மற்றும் கணினிகள் போன்ற விற்பனை மற்றும் சேவைகளை வழங்கிவருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சமூக வலைத்தளமான LinkedIn-ஐ 26.2 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது. இதற்கான அறிவிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
LinkedIn தொழில்முறை சார்ந்த சமூக வலைதத்தள சேவை நிறுவனமாகும். 433 மில்லியன் பயனாளர்களை கொண்ட LinkedIn நிறுவனத்தை பங்கு ஒன்றுக்கு $ 196 டாலர் வீதம் $ 26.2 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்குகிறது.
இந்த முடிவு தொடர்பாக ஏற்கனவே இரு நிறுவன மேலாண்மை குழு ஒப்புதல் அளித்துள்ளது, ஆனால் இன்னும் ஒழுங்குமுறை மற்றும் பிற அனுமதிகளைப் பெற வேண்டியது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LinkedIn நிறுவனம் ரீட் ஹாஃப்மேன் (Reid Hoffman) என்பவரால் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச் சந்தையில் (New York Stock Exchange) முதன்முதலாக பட்டியலிடப்பட்டது. இப்போது LinkedIn சமூக வலைத்தளத்தில் உலகம் முழுவதும் 433 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
Please Read Also: இந்தியாவிலுள்ள முக்கிய 10 ஸ்டார்ட் அப் இன்குபேட்டார்கள்