வீட்டு வேலைகள் தொடர்பான சேவை வழங்குபவர்களை இணைக்கும் LocalRamu அப்ளிகேஷன் முதல்நிலை முதலீட்டை பெற்றுள்ளது
வீட்டு வேலைகள் தொடர்பான சேவை வழங்குநர்களை இணைக்கும் LocalRamu அப்ளிகேஷன் விதை முதலீட்டை (Seed Funding) பெற்றுள்ளது. LocalRamu அப்ளிகேஷன் உள்ளூர் சேவை வழங்குபவர்களான எலக்ட்ரீஷியன், மின்னணு பழுது பார்பவர்கள், பிளம்பிங், வீட்டில் சுத்தம் செய்பவர்கள், பூஜை / பண்டிட், ஒப்பனை (beautician), கார் /பைக் பழுது பார்பவர்கள், உட்புற வடிவமைப்பு, நீர் டேங்கர் மற்றும் வாட்டர் பாட்டில் வீச்சு, புகைப்பட கலைஞர்கள், சலவை, பெண்கள் தையல்காரர், வீட்டு ஆசிரியர் மற்றும் பல சேவைகள் வழங்குபவர்களை இணைத்துள்ளது.
ஏதேனும் சேவைகள் தேவைப்படும் பட்சத்தில் LocalRamu மூலம் தொடர்பு கொள்ளும்போது அருகில் உள்ள சேவை வழங்குபவர்களை தேவைபடுவோருடன் இணைக்கிறது.
LocalRamu-ல் பெங்களூர்வை சேர்ந்த இரண்டு பேரும், சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் விதை முதலீட்டை (Seed Funding) செய்துள்ளனர். இந்த முதலீட்டு தொகை எவ்வளவு என்று வெளியிடப்படவில்லை.
PLEASE READ ALSO: ஆன்லைன் மூலம் சட்ட ஆவணங்களை உருவாக்கித்தரும் Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம் முதலீட்டு நிதியை பெற்றது
ஜனவரி 2016-ஆம் ஆண்டு சந்தோஷ் தியாகி என்பவரால் LocalRamu அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டது. இந்த ஸ்டார்ட் அப்பில் 10 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். LocalRamu அப்ளிகேஷன் இன்னும் பீட்டா நிலையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1 தேதி இந்த அப்ளிகேஷன் நேரடி பயன்பாட்டிற்கு வரும்.