ஆன்லைன் மூலம் சட்ட ஆவணங்களை உருவாக்கித்தரும் Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம் முதலீட்டு நிதியை பெற்றது

Share & Like

ஆன்லைன் மூலம் சட்ட  உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் போன்ற ஆவணங்களை உருவாக்கித்தரும் Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம் Kalapataru Power Transmission நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ரஞ்சித் சிங்கிடமிருந்து முதலீட்டு நிதியைப் பெற்றுள்ளது. Legistify பெற்ற முதலீட்டு நிதி எவ்வளவு என்று வெளியிடப்படவில்லை. 

legistify
                                      IMAGE CREDIT:LEGISTIFY.COM

Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆன்லைன் மூலம் நிறுவனம் ஒப்பந்தம் (Agency Agreement), வணிகப் பதிப்பு ஒப்பந்தம் (Business Agreement), வர்த்தக ஒப்பந்தம் (Commercial Agreement), தகராறு தீர்மானம் ஒப்பந்தம் (Dispute RESOLUTION Agreement), அறிவுசார் சொத்து (Intellectual Property), தொழிலாளர் / பணிச் சட்டம் ஒப்பந்தம் (Labour/Work law Agreement), ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் (Real Estate Agreement), சேவைகள் ஒப்பந்தம் (Services Agreement), பராமரிப்பு ஒப்பந்தம் (Maintenance Agreement), போக்குவரத்து ஒப்பந்தம் (Transportation Agreement)  மற்றும் பல சட்ட ஆவணங்களை சட்ட வல்லுனர்களின் உதவியுடன் உருவாக்கித்தருகிறது. 


PLEASE READ ALSO:  பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான TrueBil முதலீட்டாளர்களிடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக பெற்றது


நமக்கு தேவையான ஆவணங்களை உருவாக்க  Legistify நிறுவனம் கேட்டும் கேள்விகளுக்கு பதிலளித்த பின் ஆவணங்களை Legistify உருவாக்கி கொடுக்கும்.  இந்த ஆவணங்களை பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். நமது ஆவணங்களில் மாற்றம் ஏதும் 15 நாட்களுக்குள் செய்ய விரும்பினால் இலவசமாக செய்து கொள்ளலாம்.

                                         IMAGE SOURCE:INC42.COM

அக்சட் சிங்கால் (Akshat Singhal) என்பரால் டிசம்பர்,2015 ஆம் ஆண்டு டெல்லியில் Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டது. ரிதேஷ் மற்றும் அபினவ் கவுர் போன்றோர் பின் இணை நிறுவனராக நிறுவனத்தில் இணைந்தனர். இப்போது 10 ஊழியர்கள் Legistify நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.  நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 500 மேற்பட்ட ஆவணங்களை உருவாக்கி கொடுத்துள்ளது.

இந்த பெறப்பட்ட முதலீட்டு நிதியை வைத்து குழு விரிவாக்கம் (team expansion),சந்தைப்படுத்தல் (marketing) மற்றும் தயாரிப்பை மேம்படுத்துதல் (Product Development) போன்றவற்றிற்கு பயன்படுத்தப்போவதாக Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம் கூரியுள்ளது.


PLEASE READ ALSO:  நாய்கள் சம்பந்தமான பொருட்களை விற்று உங்களால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெற்றிருக்கிறது Heads Up For Tails (HUFT) நிறுவனம்


 

 

 

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons