இந்திய மாம்பழ இறக்குமதிக்கு உள்ள தடை விரைவில் நீக்கப்படும்: கொரியா
இந்திய மாம்பழ இறக்குமதிக்கு உள்ள தடையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொரிய தூதர் சோ ஹூயன் (Cho Hyun) தெரிவித்துள்ளார். அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதைக் குறிப்பிட்டார்.
இந்திய மாம்பழம் இறக்குமதி விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும், நடைப்பெறவுள்ள விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை (CEPA- Comprehensive Economic Partnership Agreement) மேம்படுத்தும் பேச்சுவார்த்தை கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்படும் என்று கொரிய தூதர் சோ ஹூயன் தெரிவித்தார்.
CEPA இரு நாடுகளிடையே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துக்கான பாலமாக இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து ஜூன் மாதத்தில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாகவும் சோ ஹூயன் குறிப்பிட்டார்.
PLEASE READ ALSO: ஏற்றுமதி, இறக்குமதியில் Freight Forwarder மற்றும் Clearing Agent ஆகியோருக்கிடையே உள்ள வேறுபாடுகளை தெரிந்துகொள்ளுங்கள்