வேளாண்மை இயந்திரக் கருவிகள் மற்றும் இடுபொருட்கள் உற்பத்தியாளர்களையும், விவசாயிகளையும் இணைக்கும் Karnataka Agri Expo 2016
வேளாண்மை இயந்திரக் கருவிகள் உற்பத்தியாளர்களையும் மற்றும் வேளாண் இடுபொருட்கள் உற்பத்தியாளர்களையும், விவசாயிகளையும் இணைப்பதற்காக Karnataka Agri Expo 2016 நடைப்பெறவுள்ளது.. Karnataka Agri Expo 2016 கண்காட்சி ஜூலை 6 முதல் 10 வரை கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நடைப்பெறவுள்ளது.
இக்கண்காட்சியில் வேளாண்மை இயந்திரக் கருவிகள் உற்பத்தியாளர்கள், வேளாண் இடுபொருட்கள் உற்பத்தியாளர்கள், நிபுணர்கள், பயிற்சியாளர்கள், வேளாண்மை அமைச்சர்கள், விவசாயிகள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
வேளாண்மை பொறியியல் (farming Engineering), தயாரிப்புகள் (Manufacturing ), இயந்திர கருவிகள் (Machine Tools), வேளாண்மை இடுப்பொருட்கள் மற்றும் சர்வதேச வேளாண் தொழில்நுட்பங்கள் (technology) போன்றவை இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
Karnataka Agri Expo 2016 கண்காட்சியில் புதிய தகவல்கள், கண்டுபிடிப்புகள் (innovation), நவீன தொழில்நுட்பங்கள் (disruptive technology) விவசாயத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், ஸ்டார்ட் அப்கள் (Startup), வேளாண்மை ஆய்வு (FARMING analysis), மொபைல் அப்ளிகேசன்கள் (mobile App) , மேகம் (cloud), சைபர் பாதுகாப்பு (cyber security), சமூக ஊடகங்கள் (social media) மற்றும் இ-காமர்ஸ் (e-commerce) உள்ளிட்ட தலைப்புகள் குறித்த நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு:
PLEASE READ ALSO: இலவச மீன் வளர்ப்பு பயிற்சி தஞ்சாவூர் மாவட்டத்தில்