அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்
ஜெப் பெசாஸ் (Jeff Bezos) அமேசான் (Amazon) நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி. இ-காமர்ஸ் என்ற துறையின் வளர்ச்சிக்கு ஜெப் பெசாஸ் (Jeff Bezos) ஒரு முக்கிய காரணம்.அமேசான் நிறுவனம் ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாகும். ஜெப் பெசாஸின் சொத்து மதிப்பு $59.2 பில்லியன் டாலர். Forbes நாளிதழின் 2016-ஆம் ஆண்டு உலகின் பணக்கார பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

ஜெப் பெசாஸ் (Jeff Bezos) கூறியுள்ள வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்:
- நீங்கள் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் வருத்தப்படாதீர்கள்.
- உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள் மூளையை அல்ல.
- மார்க்கெட்டிங்கை விட வாடிக்கையாளர்களின் சேவைகளுக்காக அதிகம் செலவழியுங்கள்.
- வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
- நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.
PLEASE READ ALSO: தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய சுந்தர் பிச்சை வெற்றி கதை
- வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள்.
- உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் (Passion) விசயத்தையே பின்பற்றுங்கள்.
- உங்கள் நிறுவனத்தில் கலாசாரத்தை உருவாக்குங்கள்.
- சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்பளிக்கும்.
- நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள் (Take a Risk).
PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்