உங்களுக்கு பெரிய தொழில் யோசனை இருக்கிறதா? அப்படியென்றால் உங்கள் ஸ்டார்ட் அப் யோசனைக்கு முதலீட்டை தேடுங்கள்: April 13-15, IMPACT CHAPTER HYD 2016
DHI Labs incubator ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக ஏப்ரல் 13-15 தேதிகளில் ஹைதராபாத்தில் IMPACT CHAPTER 2016 நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. IMPACT CHAPTER 2016 நிகழ்ச்சியில் உலகின் பல நாடுகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 50-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், வழிகாட்டிகள், வல்லுனர்கள், சர்வதேச பிரதிநிதிகள், வல்லுனர்கள் மற்றும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
தொழில்முனைவோர்கள் தங்களின் ஸ்டார்ட் அப் யோசனைகளுக்கு முதலீட்டை பெறவும், வழிகாட்டிகளை பெறவும் IMPACT CHAPTER 2016 நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமையும். இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கிட்டத்தட்ட $.100 மில்லியன் டாலர்களை முதலீட்டாக பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் வல்லுனர்களின் விவாதங்கள், பேச்சுகள், வெற்றியடைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஊக்கமூட்டும் கதைகள் போன்றவை நடைபெறும். தொழில்முனைவோர்களுக்கு அதிக அளவில் நெட்வொர்க்கள் , ஐடியாக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
IMPACT CHAPTER 2016 நிகழ்ச்சி Hyderabad International Convention Centre(HICC), HICC Complex , Near HITECH City, Hyderabad-ல் நடைபெறுகிறது. IMPACT CHAPTER 2016 நிகழ்ச்சியில் பங்கேற்க முன் பதிவு செய்ய வேண்டும்.
PLEASE READ ALSO: NASSCOM அமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் Startup Warehouse-ஐ சென்னையில் அமைத்துள்ளது