HYPERCAT கூட்டமைப்பு தகவல் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இன்குபேட்டரை ஹைதராபாதில் தொடங்கியுள்ளது (HYPERCAT Opens Incubator for Indian Tech Start-Ups in Hyderabad)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ப்ளெக்ஸ்ஐ (Flexeye) நிறுவனத்தின் ஹைபர்கேட் கூட்டமைப்பு (HYPERCAT consortium) தகவல் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்காக (Tech Startups) இன்குபேட்டரை (Incubator) ஹைதராபாதில் தொடங்கியுள்ளது. இந்த இன்குபேட்டார் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கு தேவையான கட்டமைப்பு (Infrastructure), கணினி (PC), இணையத்தளம் (Internet), பணியிடம் (Work Station), ஆலோசனைகள் (Advice), வழிகாட்டுதல் (Mentorship), முதல்நிலை நிதிகள் (Seed Funding) போன்றவற்றை அளிக்கும்.
ஹைபர்கேட் கூட்டமைப்பில் (HYPERCAT consortium) British Telecom, Cisco, Flexeye, KPMG, Symantec and WSP உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதற்க்கு இங்கிலாந்து அரசு ஆதரவு அளித்து வருகிறது. 8000 சதுர அடி கொண்ட HYPERCAT இன்குபேட்டர் (Incubator) மையத்தில் 40 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (Indian startups) தொடங்குவதற்கு இடமளிக்கும். தொடக்க நிறுவனங்களுக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான முதல்நிலை நிதியளிப்பையும் (Seed Funding) HYPERCAT இன்குபேட்டர் (Incubator) வழங்கும்.
PLEASE READ ALSO: தமிழில் மென்பொருள்கள் உருவாக்குவதற்கு உதவி செய்கிறது தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (TAMIL SOFTWARE INCUBATION CENTER)