தொழிலுக்கான கிராபிக்ஸ், வடிவமைப்பு, வீடியோ, அனிமேஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பல தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் Fiverr.com

Share & Like

இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு தொழிலுக்கும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை புகுத்தாமல் வெற்றி பெறமுடியாது. தொழில் போட்டியுள்ள உலகில், தொழிலை முன்னேற்ற டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தை புகுத்தியே ஆக வேண்டும்.

fiverr.COM
Img Credit: publishinginsider.net

ஒரு தொழிழுக்கு பல டிஜிட்டல் சேவைகள் தேவைப்படும். நிறுவனம் தொடங்கும் போது Logo வடிவமைப்பது, பிசினஸ் கார்டு, letter Pad, brochure வடிவமைப்பு, இணையத்தளத்தை வடிவமைப்பது (web designing) போன்ற டிஜிட்டல் சேவைகள் தேவைப்படும்.

தொழிலை தொடங்கிய பின் அதை வளரச்செய்ய மார்க்கெட்டிங், விளம்பரம் போன்ற பலவற்றிற்கும் தொழில்நுட்பத்தின் தேவை உள்ளது. இத்தகைய டிஜிட்டல் தேவைகளை (digital services) செயல்படுத்த Fiverr.com என்ற ஒரே தளத்தில் (marketplace) எண்ணற்ற பகுதி நேர பணியாளர் (freelancer) உள்ளனர். நமக்கு தேவைப்படும் சேவைகளை நிறைவேற்ற நமக்கு விருப்பமுள்ள நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஆர்டர் செய்து அந்த வேலையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

நமக்கு தேவைப்படும் சேவைகளுக்கு தகுந்தாற் போல் விலை (price) நிர்ணயிக்கப்படும். Fiverr தளத்தில் இடம்பெற்றிருக்கும் சேவை அளிப்பவர்களுக்கு rating வழங்கப்பட்டிருக்கும். இதனைப் பொருத்தும் சேவை வழங்குபவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Graphics & Design

ஆரம்பகட்ட தொழிலுக்கு நிச்சயம் சில கிராபிக்ஸ் மற்றும் வடிவமைப்புகளை செய்ய வேண்டியிருக்கும். Logo Design, brochure design, Business Cards & Stationery, letter pad, Photoshop Editing, Presentation Design, banner design மற்றும் Web & Mobile Design போன்ற அடிப்படை வடிவமைப்புகளை செய்வது ஒரு தொழிலுக்கு அவசியமாகும். இந்த கிராபிக்ஸ் மற்றும் வடிவமைப்பு சேவைகளை செய்து கொடுக்க Fiverr.com யில் நிறைய வடிவமைப்பாளர்கள் (designers) உள்ளனர். விலை (price), வடிவமைப்பாளர்கள் செய்து முடித்த முந்தைய வடிவமைப்பின் தரம், ரேட்டிங் (ratings) ஆகியவை பொறுத்து வடிவமைப்பாளர்களை தேர்ந்தெடுத்து நமக்கு தேவையானவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம்.

இது மட்டுமல்லாமல் Illustration, Flyers & Posters, Book Covers & Packaging, Social Media Design, Banner Ads,  3D & 2D Model, T-Shirts design, Infographics, Vector Tracing, Cartoons & Caricatures, Invitations  ஆகியவையும் Fiverr மூலம் வடிவமைத்துக் கொள்ளலாம்.

Digital Marketing

விற்பனைதான் (sales) ஒரு தொழிலை வளர்ச்சி (growth) பாதைக்கு அழைத்துச் செல்லும். தயாரிப்பை/ சேவையை மார்க்கெட்டிங் (marketing) செய்யும் அளவிற்கு விற்பனையும் நிகழும். மார்க்கெட்டிங்கில் மக்களிடம் எளிதாக சென்றடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) உதவுகிறது.

ஒரு நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க Social Media Marketing, Search Engine Optimization (SEO), Content Marketing, Social Video Marketing, Email Marketing, Search engine marketing (SEM), Mobile Advertising, Web Traffic, Web Analytics, Local Listings, Influencer Marketing, Marketing Strategy, Domain Research போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை செய்வது மிகவும் அவசியமாகும்.

இது போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங்  தேவைகளை செய்து கொடுக்க Fiverr யில் வல்லுநர்கள் உள்ளனர். அவர்களின் மூலமும் தொழிலுக்கு தேவையான டிஜிட்டல் மார்கெட்டிங்கை செய்து கொள்ளலாம். 

Programming & Tech

தொழிலை தொழில்நுட்பம் இல்லாமல் மேம்படுத்த முடியாது. தொழிலின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் பக்க பலமாக இருக்கும். Web Programming, Website Building & content management system (CMS), Ecommerce, Mobile Apps & Web, Desktop applications, Data Analysis & Reports, Databases, User Testing, WordPress, Convert Files போன்ற பல தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் Fiverr யில்  உள்ளனர். 

Video & Animation

தொழிலை பற்றி வீடியோ மற்றும் அனிமேஷன் மூலம் விளக்கினால் வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடையும். பல நிறுவனங்கள் இன்றைக்கு வீடியோ மார்க்கெடிங் (video marketing) உத்தியை பின்பற்றுகின்றன. Whiteboard & Explainer Videos, Promotional & Brand Videos, Animated Characters & Modeling, video greeting, Intros & Animated Logos, Music Videos, professional Spokesperson video போன்ற பல வீடியோ உத்திகள் டிஜிட்டல் மார்க்கெடிங்கில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாதிரியான வீடியோக்களை தயாரிக்க Fiverr யில் வல்லுநர்கள் உள்ளனர். 


Please Read This Article For Your Growth:

Billionaire Drop Outsதோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கு : கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தங்களது கனவை நிறைவேற்றிய 10 கோடீஸ்வரர்கள்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons