இ-காமர்ஸ் தளங்களில் விற்கும் விற்பனையாளர்களுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது e-Smart SME e-Commerce Loan
இணையத்தின் அபரிவிதமான வளர்ச்சிக்கு பிறகு நமக்கு தேவைப்படும் பொருட்களை நேரடியாக வாங்குவது குறைந்து ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும், விற்கும் வணிகம் இ-காமர்ஸ் எனப்படுகிறது. இப்போது அனைத்து விதமான பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது. ஏராளமான இ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. Flipkart.com, Amazon.in, Snapdeal.com, Paytm.com, Jabong.com, Yepme.com, Myntra.com போன்றவை இந்தியாவிலுள்ள முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்களாகும்.
பொது துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இ-காமர்ஸ் தளங்களில் விற்கும் விற்பனையாளர்களுக்காக (Sellers) e-smart SME e-Commerce Loan என்ற வங்கி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த e-Smart SME e-Commerce Loan கடன் திட்டத்தை இந்த ஆண்டு ஜனவரி 15-ல் அறிமுகபடுத்தியது.
PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்
பல விற்பனையாளர்கள் இ-காமர்ஸ் தளங்களில் இணைந்து அவற்றின் மூலம் தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். உதாரணத்திற்கு Snapdeal.com நிறுவனத்தில் 2.3 இலட்சம் விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பொருட்களை விற்பதற்காக இ-காமர்ஸ் தளங்களை பயன்படுத்துகிறார்கள். இ-காமர்ஸ் தளங்களில் விற்கும் விற்பனையாளர்களுக்கு நடைமுறை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முதலீடு தேவைப்படும். இந்த e-smart SME e-Commerce Loan கடன் திட்டம் இ-காமர்ஸ் விற்பனையாளர்களின் நடைமுறை மூலதனத்தை (Working Capital) பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடன் தொகையின் அளவு
கடனை நடைமுறை மூலதனத்தை பூர்த்தி செய்ய மட்டுமே பெற முடியும். இந்த கடன் திட்டத்தில் அதிகபட்சமாக 25 இலட்சம் வரையில் பெறலாம். 10 இலட்சம் வரையில் எந்தவித சொத்து உத்திரவாதமும் தேவையில்லை. பெண்கள் தொழில் முனைவோருக்கு சிறப்பு சலுகையாக வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து பெறப்படும். 10 இலட்சத்திற்குள் கடன் பெறுவோர் பிரதம மந்திரியின் முந்திரா யோஜனா (Mudra Yojana) திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். எனவே முந்திரா யோஜனா திட்டத்தின் பயனையும் பெறலாம்.
PLEASE READ ALSO: தொடக்க நிறுவனங்கள் வளர்வதற்கு உதவும் PayPal இந்தியாவின் Start Tank இன்குபேட்டார் சென்னையில்
விற்பனையாளர்களின் நன்மதிப்பை சோதிக்கும் விதம்
வங்கிகள் கடனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக அவர்கள் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) மற்றும் செலுத்திய வருமான வரி (Income Tax Returns), அவர்கள் வாங்கிய பிற கடன்களின் நிலவரம் போன்ற நன்மதிப்புகளை சோதனை செய்யும். ஆனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா e-smart SME e-Commerce Loan கடன் திட்டத்தில் விற்பனையாளர்களின் நிதிநிலை அறிக்கை மற்றும் செலுத்திய வருமான வரி சோதிப்பதற்கு பதிலாக இ-காமர்ஸ் நிறுவனத்தில் உள்ள அவர்களின் நன்மதிப்பு, அவர்களின் செயல்திறன் ஆகியவற்றை சரிபார்க்கிறது. இதற்காக Snapdeal.com நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. ஏதேனும் Snapdeal.com விற்பனையாளர் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களின் தகவல்களை Snapdeal நிறுவனத்திடமிருந்து நேரடியாக பெறும்.