மாவட்ட வாரியாக தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் மேம்படுத்தும் மாவட்டத் தொழில் மையம் (DISTRICT INDUSTRIES CENTER(DIC))
தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர்களை உருவாக்க மற்றும் வளர்க்க அரசு பல உதவிகளை செய்கிறது. தொழில்கள் முன்னேற்றுவதற்கான உதவிகளை வழங்குவதற்காக அரசு பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. இதில் மாவட்ட வாரியாக தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் மேம்படுத்த மாவட்டத் தொழில் மையம் ( DISTRICT INDUSTRIES CENTER(DIC) ) என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத் தொழில் மையம் ( DISTRICT INDUSTRIES CENTER(DIC) ) எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது. மாவட்டத் தொழில் மையங்கள் ( DISTRICT INDUSTRIES CENTER(DIC) ) அந்தந்த மாவட்டகளில் உள்ள தொழில்களை வளர்ப்பதற்கும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறது.
மாவட்டத் தொழில் மையத்தின் பணிகள் (Activities of District Industries Center (DIC)) :
- தொழில் முனைவோர்களுக்கு (Entrepreneur) தேவையான ஆலோசனைகளையும் (Advices), வழிகாட்டல்களையும் (guidance) வழங்குகிறது.
- நலிவடைந்த (Sickness) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை புனரமைக்க (Restoration) ஏற்பாடு செய்கிறது.
- மத்திய, மாநில அரசுகளின் குறு,சிறு மற்றும் நடுத்தர கொள்கையின் படி தொழில் நிறுவனங்களுக்கு மானியங்களை (Incentives and Subsidy) வழங்குகிறது.
- மத்திய, மாநில அரசுகளின் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் சம்மந்தமான திட்டங்களின் (Micro, Small and Medium Enterprises Schemes) உதவிகளை தொழில் முனைவோர்களுக்கு பெற்றுத் தருகிறது.
- மத்திய, மாநில அரசுகள் உருவாக்கும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் திட்டத்திற்கு (Micro, Small and Medium Enterprises Schemes) பயனாளிகளை தேர்வுச் செய்து அவர்களுக்கு தேவையான கடன் (Loan) வசதிகளை பெற்று தருகிறது.
- குழுமத் தொழில் வளர்ச்சி திட்டத்தின் (CLUSTER DEVELOPMENT PROGRAMME (MSE-CDP)) அடிப்படையில் தொழில் நிறுவனங்களின் தேவைகளை கண்டறிந்து, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கிறது. ஒப்புதல் வழங்கப்பெற்ற திட்டங்களை (Schemes) நடைமுறைப்படுத்துகிறது.
- மாவட்ட அளவில் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ள பல பயிற்சிகள் (DISTRICT INDUSTRIES CENTER organizes Training programs to Entrepreneurs) மற்றும் கருத்தரங்குகளை நடத்துகிறது.
- தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் முனைவோர் பதிவறிக்கை (Entrepreneur Memorandum) பகுதி-1 ( EM PART-1 & EM PART-2 ) மற்றும் பகுதி-2 வழங்குகிறது.
- குடிசை தொழில் மற்றும் கைவினை சம்மந்தப்பட்ட தொழில்கள் வளர்வதற்கு உதவுகிறது (Assistance to Cottage industry and Handicrafts enterprises) மற்றும் அதற்கான சான்றுகளை வழங்குகிறது.
- தொழில் முனைவோர்களுக்கு குடிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்றவற்றிடம் சான்றிதழ்களை பெற உதவுகிறது. ( Assist obtaining licenses from the Water Supply Board, Electricity Board, No Objection Certificates etc).
- மத்திய மற்றும் மாநில அரசின் சிறந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு (Central and State Micro, Small & Medium Enterprises Awards) பரிந்துரை செய்கிறது.
- புதிய தொழிற்கூட்டுறவு சங்கங்களை (Business Co-Operatives) அமைக்க நடவடிக்கை எடுக்கிறது.
- மின்சாரம் சம்மந்தப்பட்ட மானியங்களை (Power Subsidy) வழங்குகிறது.
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாராக்கடன் (bad debt of MSMEs) பிரச்சனைகளை கண்டறிந்து குழு (Consortia) மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறது.
- ஒருமுனை தீர்வுக்குழுவின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உரிமங்களை பெற்று தருகிறது.
- பல்வேறு தொழில் சம்மந்தமான கண்காட்சி (Fairs and exhibitions) மற்றும் ஊக்குவிப்பு முகாம்களை (Promotion camps) நடத்துகிறது.
மத்திய, மாநில அரசின் பெரும்பாலான தொழில் திட்டங்கள் மாவட்ட தொழில் மையத்தின் (DISTRICT INDUSTRIES CENTER(DIC) ) மூலமே செயல்படுத்தப்படுகின்றன. தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மாவட்ட தொழில் மையத்தை ( DISTRICT INDUSTRIES CENTER(DIC) ) அணுகி பல்வேறு உதவிகளை பெறலாம்.