DesignBids நிறுவனம் Indian Angel Network-யிடமிருந்து முதலீட்டு நிதியை பெற்றுள்ளது
டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் DesignBids. இந்நிறுவனம் கட்டிடக்கலை (architecture) மற்றும் உட்பகுதி வடிவமைப்பு (interior design) சேவை துறையில் உள்ளது. இணையத்தளத்தில் கட்டிட உரிமையாளர்களையும் (project owners), கட்டட மற்றும் உட்பகுதி வடிவமைப்பாளர்களையும் (architects and interior designers) இணைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு தேவையான கட்டிட வடிவமைப்பை DesignBids நிறுவனம் செய்து வருகிறது.
Indian Angel Network-ஐ சேர்ந்த அம்பரீஷ் ரகுவான்ஷி (Ambarish Raghuvanshi) மற்றும் அரிஹந்த் ஜெயின் (Arihant Jain) என்பவர்களிடமிருந்து முதலீட்டு நிதியை (funding) பெற்றுள்ளது இந்த முதலீட்டுத் தொகை எவ்வளவு என்று இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த இருவரும் DesignBids நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் (company board) இணைய உள்ளார்கள்.
DesignBids நிறுவனம் நவம்பர்,2015-ஆம் ஆண்டு நிதிஷ் ஜோசப் மான்சன் (Nithish Joseph Monson) மற்றும் ஸ்ரேயா பிஷ்ட் (Shreya Bisht) ஆகியோர்களால் டெல்லியில் தொடங்கப்பட்டது.
இந்த முதலீட்டை வைத்து அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த போவதாகவும், திறமையான குழு விரிவாக்கம் (expand the talent team) மற்றும் அனைத்து முக்கிய பெருநகரங்களிலும் தனது நடவடிக்கைகளை அதிகரிக்கப்போவதாக DesignBids தெரிவித்துள்ளது.
அலுவலகங்கள், வீடுகள், வணிக கட்டிடங்கள், மாணவர் விடுதிகள்,அறைகள் போன்ற 100-க்கும் மேற்பட்ட திட்டங்களும் (projects), 300-க்கும் மேற்பட்ட கட்டிட வடிவமைப்பாளர்களும் (designers) DesignBids இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
PLAEASE READ ALSO : உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள் -FRED DELUCA(Founder of Subway Restaurants)