முன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாகி : ஃபேஸ்புக் Messenger ன் உத்திகள் வகுக்கும் தலைவரான ஆனந்த் சந்திரசேகரன்

Share & Like

ஆனந்த் சந்திரசேகரன் (Anand Chandrasekaran) முன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளில் ஒருவராவார். ஃபேஸ்புக் (facebook) நிறுவனத்தின் Messenger அப்ளிகேஷன் பிரிவுக்கு உலக அளவில் உத்திகள் (global strategies) வகுக்கும் தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார்.

 

ANAND CHANDRASEKARAN
Img Credits: wsj.net

 

கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் எம்.எஸ் பட்டமும் (M.S. in Electrical Engg) பெற்றவர்.

வாங்கிய விருதுகள்

2010 ல், World Economic forum அமைப்பின் இளம் உலக தலைவர் (Young Global Leaders) பட்டியலில் ஆனந்த் சந்திரசேகரன் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. Fortune இதழ் வெளியிட்ட இந்தியாவில் தொழிலின்  செல்வாக்குள்ள இளைஞர்கள் ’40 under 40′ பட்டியலில் இடம்பிடித்தார்.

பணியாற்றிய நிறுவனங்கள்

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை Snapdeal நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி (Chief Product Officer) பொறுப்பில் இருந்தார்.

2014-ம் ஆண்டு மார்ச் முதல் 2015-ம் ஆண்டு மே மாதம் வரை ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி (Chief Product Officer) பொறுப்பிலும் இருந்தவர். ஏர்டெல் நிறுவனத்துகின் Wynk Music ஐ தொடங்கியதில் முக்கிய பங்காற்றினார்.

 

2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை யாகூ (Yahoo) நிறுவனத்தின் உலகளாவிய வியாபார தேடலுக்கான தயாரிப்புப்  பிரிவின் மூத்த இயக்குநராகவும் (Sr. Director, Search Products) பணியாற்றியுள்ளார்.

2001 ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பின் Aeroprise என்ற தனிப்பட்ட மொபைல் பயன்பாடுகள் மென்பொருள் (mobile applications software) சார்ந்த நிறுவனத்தை சில பேருடன் இணைந்து தொடங்கி  அதன் இணை நிறுவனரானார். 2011 ல் BMC Software நிறுவனம் Aeroprise ஐ கையப்படுத்தியது.

 

இவர் முதலீட்டு செய்த ஸ்டார்ட் அப்கள்

ஆனந்த் சந்திரசேகரன் இந்திய ஸ்டார்ட் அப் சூழியலில் (startup ecosystem) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவர் பல தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் இல்லாமல் வாடகைக்கு வீடுகளை பெற உதவும் நிறுவனமான NoBroker, ஸ்மார்ட்போன் கேமிங் அப்ளிகேஷனை (gaming app) உருவாக்கும் நிறுவனமான Gamezop, ஸ்மார்ட்போன் மென்பொருள் சார்ந்த CREO, Buttercupsஆன்லைன் ஹெல்த் கேர் ஸ்டார்ட் அப் Pluss மற்றும் உணவு தொழில் நுட்ப (food-tech ) நிறுவனமான Innerchef போன்ற பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நிதி முதலீடு செய்துள்ளார்.


Please Read This Article:

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons