நாட்டின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக பின்னி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார் (Binny Bansal Appointed Flipkart New CEO)

நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக (Chief Executive Officer) அதன் இணை நிறுவனரான (Co-Founder) பின்னி பன்சாலை (Binny Bansal) நியமிப்பதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இப்பொழுது பின்னி பன்சால் Flipkart-ன் முதன்மை இயக்க அதிகாரியாக (Chief operating officer) இருந்துவருகிறார். Flipkart நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து தலைமை நிர்வாக அதிகாரியாக (Chief Executive Officer) இருந்து வரும் சச்சின் பன்சால் (Sachin Bansal) நிர்வாக தலைவராக (executive chairman) புதிய பதவி உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் பன்சாலும் (Sachin Bansal) Flipkart-ன் இணை நிருவனராவார் (Co-Founder).
IIT-Delhi-ல் படித்த பின்னி பன்சாலும், சச்சின் பன்சாலும் 2007-ஆம் வருடம் Flipkart நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு Amazon நிறுவனத்தில் பணிபுரிந்தனர். Flipkart நிறுவனம் இதுவரை 3.2 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக பெற்றுள்ளது. இந்நிறுவனம் 15.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாகும். Flipkart நிறுவனம் Myntra நிறுவனத்தை 330 மில்லியன் அமெரிக்க டாலருக்கு 2014 வாங்கியது குறிப்பிடத்தக்கது. Flipkart-ன் போட்டியாளராக அமெரிக்காவைச் சேர்ந்த Amazon நிறுவனமும், இந்தியாவைச் சேர்ந்த Snapdeal நிறுவனமும் உள்ளது.
PLEASE READ ALSO : 2015-ஆம் ஆண்டு அதிகப்பட்ச நிதியை முதலீடாகப் பெற்ற 7 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Highest Funded 7 Indian Tech Startups of 2015)