Ask The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை
TamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA’s வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை 5 மணிக்கு தொழில் முனைவோருக்கான வழிகாட்டி (Ask the Mentor Session) நிகழ்ச்சியை Youtube ல் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
இந்த வாரம் சனிக்கிழமையில் Dr H.C.அஜீசா ஜலாலுதீன் (Azeeza Jalaludeen) அவர்கள் தொழில்முனைவோருக்கு பல வழிகாட்டிகள், ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நிறைய மிருகங்கள், பூச்சிகள் போன்ற இயற்கை சார்ந்தவைகள் நமக்கு நிறைய தொழிலின் கருத்துக்களை சொல்லி கொண்டு இருக்கின்றன. வண்ணாத்திப்பூச்சி விளைவுவில் (Butterfly effect) யில் இந்த சிந்தனையை நாம் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், சின்ன மாற்றம், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவை, மாற்றத்தை தோற்றுவிக்கலாம்.
தாய் முட்டையை இட்டுவிட்டுச் சென்றதும், அதிலிருந்து கம்பளி புழு (catterpillar) வெளிவருகிறது. வெளிவரும் கம்பளி புழு தனது முட்டையின் மிதிச் செல்களை உண்டுவிட்டு தனது வாழ்க்கையை துவங்குகின்றது. பின்னர் பல மாற்றங்கள், தடங்கல்களுக்கு பிறகுதான் அழகான வண்ணத்துப் பூச்சியாக (butterfly) உருவெடுக்கும்.
இதே போல் தொழில்முனைவோராக உருவாகும்போது, வெற்றிபெற வேண்டும் என்ற உற்சாகத்துடன்தான் தொடங்குகிறோம். ஆனால் இடையில் எவ்வளவோ தடங்கல்கள், தொழிலை செய்ய முடியாது, கைவிட்டுவிடலாம் என்று தோன்றும்போது, பல தடங்கல்களை தாண்டி வரும் வண்ணத்துப் பூச்சி போல இன்னும் அதிகமான ஆற்றலுடன், வலிமையுடனும் பயணிக்கும் போதுதான் தொழிலின் வளர்ச்சியை அடைய முடிகிறது என்ற உற்சாகமான சிந்தனையுடன் Ask the Mentor Session நிகழ்ச்சியை Dr H.C. அஜீசா ஜலாலுதீன் தொடங்கினார்.
இந்தியாவில் இப்போதும் ஏற்பட்டு கொண்டிருக்கும் பணமில்லா பொருளாதாரம் (cashless) போன்ற மாற்றத்திற்கு தகுந்தாற்போல் தொழில்முனைவோர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை சீனாவின் (china) தொழில் எடுத்துக்காட்டுடன் விளக்கினார்.
திரு. மனோகர் அவர்கள் TamilEntrepreneur.com க்கு சில தொழில்முனைவு ஆலோசனைகளை (advices) கேட்டிருந்தார்.
1. How I am work to startup basic execution?
2.How free online advertising and how to deliver promotional marketing messages to consumers?
3. How to get seed funding?
4. Finely I am a first generation entrepreneur so everything teaching and guidance for me?
போன்ற தொழில்முனைவு ஆலோசனை கேள்விகளுக்கு மிகவும் பயனுள்ள வாழிகாட்டிகளை (mentorship) வழங்கினார்.
தமிழர்களின் டி.என்ஏ.வில் தொழில்முனைவு சிந்தனை ஊறியிருப்பதாகவும் அதை தேடவேண்டிய அவசியத்தை மிகவும் அழுத்தமாக கூறினார்.
Dr H.C. அஜீசா ஜலாலுதீன் வழங்கிய வழிகாட்டிகள் கீழே உள்ள Ask The Mentor Session வீடியோவில் இடம்பெற்றுள்ளன.