World Economic Forum-ன் வருடாந்திர கூட்டத்தில் வெளியிடப்பட்ட உலகின் சிறந்த நாடுகளின் பட்டியல்
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியல் (world’s best countries Rankings) சுவிச்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்ற World Economic Forum-ன் வருடாந்திர கூட்டத்தில் வெளியிடப்பட்டது. U.S. News & World Report, BAV Consulting மற்றும் The Wharton School of the University of Pennsylvania ஆகியவை இணைந்து உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆராய்ந்து சிறந்த 60 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித வள மேம்பாட்டு குறியீட்டு அறிக்கை (United Nations’ Human Development Index), நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product), மக்களின் வாழ்க்கைத் தரம், நாட்டின் செல்வாக்கு, சாதனை, குடியுரிமை, தொழில்முனைவு , பாரம்பரியம், நாட்டின் பலம், வேலை வாய்ப்பு , பொருளாதார நிலைத்தன்மை, குடும்ப நேசம், எல்லா மக்களுக்கும் சரிசமமான வருமானம், சுற்றுலா, அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பள்ளி அமைப்புகள், பொதுச் சேவைகளின் தரம் மற்றும் மொத்த ஏற்றுமதிகள் போன்ற பல காரணிகளைக் கொண்டு உலகின் சிறந்த நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது. இதில் இந்தியா 22- வது இடத்தை பிடித்துள்ளது.
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் உள்ள முதல் 25 நாடுகள் (25 Countries in The world’s best Countries Rankings)
1. ஜெர்மனி
2. கனடா
3. ஐக்கிய ராஜ்யம் ( United Kingdom)
4. அமெரிக்கா
5. ஸ்வீடன்
6. ஆஸ்திரேலியா
7. ஜப்பான்
8. பிரான்ஸ்
9. நெதர்லாந்து
10. டென்மார்க்
11. நியூசீலாந்து
12. ஆஸ்திரியா
13. இத்தாலி
14. லக்சம்பர்க் (Luxembourg )
15. சிங்கப்பூர்
16. ஸ்பெயின்
17. சீனா
18. அயர்லாந்து
19. தென் கொரியா
20. பிரேசில்
21. தாய்லாந்து
22. இந்தியா
23. போர்ச்சுகல்
24. ரஷ்யா
25. இஸ்ரேல்
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய கூறுகள்
- ஸ்வீடன் மிகவும் நவீனமான நாடாக (most modern country) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வளர்வதற்கு சிறந்த நாடாகவும் மற்றும் உலகின் முதன்மையான பசுமை நாடாகவும் ஸ்வீடன் உள்ளது.
- டென்மார்க் பெண்களுக்கான சிறந்த நாடாக உள்ளது.
- அமெரிக்கா உலகின் மிகவும் பலம் வாய்ந்த நாடாக இருக்கிறது.
- இந்தியா முதன்மையான வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இருக்கிறது.
- தொழிமுனைவோர்களுக்கு ஜெர்மனி சிறந்த நாடாக உள்ளது.
- வணிக தோழமையுள்ள நாடாக லக்சம்பர்க் உள்ளது.
- இத்தாலி உயர்ந்த பாரம்பரியம் கொண்ட நாடாக இடம்பெற்றுள்ளது.
- பிரேசில் வருகை செய்வதற்கு ஏற்ற முதன்மையான நாடாக உள்ளது.
- கனடா மிகச் சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
PLEASE READ ALSO: ஆசிய பசிபிக் நாடுகளில் பணக்காரர்களின் (Multi-Millionaire) வளர்ச்சி அடிப்படையில் முதல் 20 நகரங்களில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன