உலக வங்கியின் எளிதாக தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல் : இந்தியாவுக்கு 130வது இடம்
உலக வங்கி எந்தெந்த நாடுகளில், தொழில் செய்ய சுமுகமான நிலை, எளிமையான சூழ்நிலை உள்ளது என்பதை ஆய்வு செய்து , “எளிதாக தொழில் செய்ய ஏற்ற நாடுகள் 2017” (“Ease of Doing Business 2017”) பட்டியலை உலக வங்கி (World Bank) வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா 130 வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு இந்தியா 131 வது இடத்தில் இருந்தது. மத்திய அரசு 2017 ல் எளிதாக தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் முதல் 50 இடங்களுக்கு முன்னேற இலக்கு வைத்திருந்த நிலையில் சென்ற ஆண்டை விட 1 இடங்கள் மட்டும் முன்னேறியுள்ளது.
10 க்கும் மேற்பட்ட அடிப்படை அம்சங்களைக் கொண்டு கணக்கிட்டு (The rankings are based on 10 indicators), பட்டியல் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியல் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் 190 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
2017 ஆம் ஆண்டின் தரவரிசையில் இந்தியா ஒட்டுமொத்தமாக 55.27% மதிப்பெண்களை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு 53.93% மதிப்பெண்களை பெற்றிருந்தது.
நாடுகளும் அது பெற்றிருக்கும் இடங்களும்:
எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகள் (“Ease of Doing Business”) பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் 2வது இடத்திலும் உள்ளது. டென்மார்க், ஹாங்காங், தென்கொரியா, நார்வே, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் ரஷ்யா 40 வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா 74 வது இடத்திலும், சீனா 78 வது இடத்திலும், பிரேசில் 123 வது இடத்திலும் உள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 10 அடிப்படை அம்சங்கள் (The rankings are based on 10 indicators):
தொழில் தொடங்குதல் (Starting a Business) 155 வது இடம், கட்டுமானங்களுக்கான அனுமதிகளைப் பெறுதல் (Dealing with Construction Permits) 185 வது இடம், மின்சார வசதி (Getting Electricity) 26 வது இடம், சொத்து பதிவு (Registering Property) 138 வது இடம், கடன் பெறுதல் (Getting Credit) 44 வது இடம், சிறுபான்மையின முதலீட்டாளர்கள் பாதுகாப்பு (Protecting Minority Investors) 13 வது இடம், வரி செலுத்தும் முறை (Paying Taxes) 172 வது இடம், எல்லை தாண்டிய வர்த்தம் (Trading Across Borders) 143 வது இடம், ஒப்பந்தங்களை செயல்படுத்துவது (Enforcing Contracts) 172 வது இடம், கடன்களை செலுத்த இயலாமையை தீர்ப்பது (Resolving Insolvency) 136 வது இடம் பெற்று ஒட்டுமொத்தமாக பட்டியலில் இந்தியா 130 வது இடத்தில் உள்ளது.
Please Read This Article :
உணவு பூங்காவில் தொடங்கும் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கான நாபர்டு வங்கியின் கடன் திட்டம்