தொழில்நுட்பம் வாழ்க்கையில் ஏற்படுத்துகிற தாக்கம் : அன்றைய இரயில் சிநேகம் முதல் இன்றைய Cab Driver Friendship வரை

Share & Like

கடந்த செய்தித்தாள் நூற்றாண்டில் ஈசல் பூச்சிக்கு போட்டியாக குறைந்த வாழ்நாள் கொண்டது ரயில் பயண சிநேகம், அதீத சிநேகங்கள் ஓரிரு நாள் உயிருடனும், ஓரிரு காலம் உணர்வுடனும் இருந்தும், இறந்தும் சென்றதுண்டு.

Ola
Img Credit: thenextweb.com

இன்றைய செயலிகள் நூற்றாண்டில் அத்தகைய அவசர நண்பர்களை Ola-களும் Uber-களும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது. பெரும்பாலும் நாம் திரும்பி பார்க்க நேரமில்லாத பரபரப்பான நிமிடங்களில் நம்முடன் ஓட்டுனர்களாக பயணிக்கும் இவர்கள், சில நேரம் நாம் விரும்பி நினைக்கும் நிமிடங்களையும், நிலையான மற்றும் நிறைவான நினைவுகளையும் நம்முடன் இறக்கி விட்டுச் செல்கின்றனர் .

என் ஊரை சேர்ந்தவர், என் பக்கத்து ஊரை சேர்ந்தவர், நான் படிக்கச் சென்ற ஊரை சேர்ந்தவர், நான் இருக்கும் துறையில் வேலை பார்த்தவர், நான் படித்த அதே படிப்பை முடித்தவர், சில நேரம் அதை விட அதிகமாக படித்தவர்கள் என எண்ணற்ற காரணங்களால் பெரும்பாலான சந்திப்புகளில் ஏதோ ஒரு கண் இமை கணக்கான மெல்லிய இழை சம தளத்தில் ஊடுருவிச் செல்வதுண்டு.

நாளைய தினத்தை பற்றிய திட்டமில்லாத நமக்கும் நம் வாழ்வின் அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை இவர்கள் வகுத்துவிட்டு செல்லும் பொழுது தோன்றுகிறது , தானியங்கி வாகனங்கள் இன்னும் காலம் தாழ்த்தியே அதன் கால் பதிக்கலாம் என்று.

பயணத்தின் முடிவில் ஓட்டுநர் நமக்கு கொடுக்கும் உயர்ந்த பட்ச மதிப்பீடான ஐந்து நட்சத்திரத்தை பார்க்கும் போது ஒரு நிமிட நேரம் நட்சத்திர அந்தஸ்த்தின் உச்சத்தில் நாமும் இருப்பதைப் போன்ற ஓர் உணர்ப்பு .

பெரும்பாலும் ஆழமாக நம்மைப் பற்றி அறியாத அல்லது நாம் அறியாத நபர்களின் நட்பு அழகாக இருக்கிறது.

இது போன்ற சில நேரங்களில் எலன் மஸ்க் (Elon Musk – founder, CEO of SpaceX;  co-founder, CEO, and product architect of Tesla Motors ) போன்றோரின் தொலைநோக்க முயற்சிகள் சிலகாலம் நமக்கு எட்டாமலும் , நம்மை அது எட்டாமலும் இருந்தால் அது சிறப்பென்று தோன்றுகிறது.


Please Read This Article For Your Growth:

எலன் மஷ்க் (Elon Musk)

Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்


 

Share & Like
RAGUPATHI
Founder at vBookmarks.com
Founder of vBookmarks.com-Social Bookmarking Platform. Sometimes I'm a #blogger, Sometimes I'm a #inforgraphic designer, Sometimes I'm a #lyrics writer, Sometimes I'm a #tutor, I'm always a #developer

RAGUPATHI

Founder of vBookmarks.com-Social Bookmarking Platform. Sometimes I'm a #blogger, Sometimes I'm a #inforgraphic designer, Sometimes I'm a #lyrics writer, Sometimes I'm a #tutor, I'm always a #developer

Show Buttons
Hide Buttons