[Video] தொழில் போர் – Episode 9 : இந்தியாவிலுள்ள தொழில்களின் 4 அமைப்பு நிலைகள் என்ன? பொருட்கள் சந்தையின் Market Leaders யார்?
சாதிகள் மற்றும் ஒரே சமூக குழுக்கள் எவ்வாறு இந்திய தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டன என்பதை சென்ற தொழில் போர் – Episode 8 நிகழ்ச்சியில் பார்த்தோம்.
இந்தியாவில் உள்ள தொழில்களை ஒரு 4 நிலைகளில் கொண்டுவரலாம். குறிப்பிட்ட பகுதியில் பராம்பரியமாக ஒரு தொழிலை நடத்தி கொண்டு வருவார்கள், அவர்களுக்கு மேலும் அந்த தொழிலை பல இடங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கும். உள்ளூர் சந்தையை மட்டும் தக்க வைத்துகொண்டால் போதும் என்ற நிலையிலேயே இருப்பார்கள். அவர்கள் கடைசி நிலை Heritage Player எனப்படுவர். இதை பற்றி தொழில் போர் – Episode 9 நிகழ்ச்சி மேலும் விளக்குகிறது.
Fillers Stage
அவர்களின் பொருட்கள் கடைகளில் பத்தோடு பதினொன்றாக இருக்கும். அவர்கள் பொருட்கள் எந்த வகையில் மற்ற பொருட்களை விட தரமுடையது என்பதை அவர்களால் விளக்கமுடியாது. கடைக்கு வாடிக்கையாளர்கள் தேடிச் சென்ற பிராண்ட் இல்லாத பட்சத்தில் மட்டுமே அவர்களின் பொருட்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதை பற்றி இங்நிகழ்ச்சி விளக்குகிறது.
Front Runners
இவர்களின் பொருட்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் இடம்பெறும். அந்த அளவுக்கு வலிமை கொண்டிருப்பார்கள். ஆனால் விளம்பரம் செய்வது நிறுத்தும் போது அவர்கள் பொருட்களின் விற்பனையும் குறைந்து விடும். சந்தையை கட்டுபடுத்தும் அளவுக்கு பலம் அவர்களுக்கு இருக்காது. பொருட்களின் விலையில் நிலைத்தன்மையை கடைபிடிக்கமாட்டார்கள் இதை பற்றி மேலும் விளக்குகிறது இங்நிகழ்ச்சி.
Market Leaders
இதுதான் தொழிலின் முதல் நிலை. Market Leaders கள்தான் சந்தையை கட்டுபடுத்துவார்கள். அவர்களின் பொருட்களின் விலையில் நிலைத்தன்மையை கடைபிடிப்பார்கள். இதை பற்றி மேலும் இங்நிகழ்ச்சி விளக்குகிறது.
தொழில்முனைவோர்கள் இதில் Market Leaders ஆக உருவாக வேண்டும் என்றுதான் கனவு மற்றும் விருப்பம் கொள்வார்கள். ஆனால் அந்த கனவு வெறும் நிறைவேறாத கனவாகவே கரைந்துவிடும்.
எப்படி சில பேருக்கு மட்டும் Market Leaders ஆக வேண்டும் என்ற விரும்பம் நிறைவேறுகிறது? சில பேரு அந்த கனவு ஏன் வெறும் கனவாகவே கரைந்துவிடுகிறது என்பதை அடுத்த தொழில் போர் – Episode 10 நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
PLEASE READ THIS ARTICLE: