1009 முறை விடாமுயற்சி செய்து 65 வயதில் KFC என்ற மிகப்பெரிய பிராண்டை உருவாக்கிய கேணல் சாண்டர்ஸ்

Share & Like

உங்களுக்கு KFC துரித உணவுகள் பிடிகுமோ பிடிக்காதோ ஆனால் கேணல் ஹார்லாந்து சாண்டர்ஸ் (Colonel Harland Sanders) கதை உங்களுக்கு நிச்சயம் பிடித்தனமானதாகவே இருக்கும்.  அவரின் பயணம் எல்லோருக்கும் வெற்றிக்கான தூண்டுதலையே கொடுக்கும். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவை இணைந்தால் எந்த வயதிலும் வெற்றியை உருவாக்க முடியும் என்பதை அவரின் வாழ்க்கை பயணம் சொல்லுகிறது.

Colonel Harland Sanders

கேணல் சாண்டர்ஸ் தன்னுடைய கென்டகி ஃபிரைடு சிக்கன் (Kentucky Fried Chicken) கடையை  உலகின் மூலை முடுக்கெல்லாம் திறந்தவர்.

1009 முறை விடாமுயற்சி

கேணல் சாண்டர்ஸின் KFC சிக்கன் உரிமையை முதன் முதலில் விற்றபோது அவருக்கு வயது 65. இந்த முதல் வெற்றி பெறுவதற்கு முன்பு 1009 முறை, உணவகங்களால் KFC சிக்கன் உரிமை (franchise) தேவையில்லை என்று சொல்லப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். இரண்டு குக்கர், மாவு, மசாலா கலவைகள் போன்றவைகளை அவரின் காரில் எடுத்துச்சென்று ஊருராக சுற்றித்திரிந்து ஒவ்வொரு உணவகங்களுக்கு சென்று அவரின் சிக்கன் செய்யும்முறையை விளக்கி விற்பனை செய்ய முயன்றார்.

ஆனால் அவரின் KFC சிக்கனை விற்பனை செய்ய யாரும் தயாராகயில்லை. அவர் 1009 முறை நிராகரிப்புகளையே சந்தித்தார். 1009 முறை விடாமுயற்சிக்கு பிறகு ஒரு உணவகத்திடம் KFC சிக்கன் உரிமையை விற்றார். KFC சிக்கன் சுவையில் மக்கள் மயங்கியதால் உணவகத்தின் எண்ணிக்கை அதிகமானது.
பல தோல்விகளை சந்தித்த சாண்டர்ஸ்

Colonel Sanders சிறு வயதில் பல தோல்விகளை சந்தித்தவர். 1890 ல் பிறந்தார். அவருக்கு 5 வயது இருக்கும்போது அவரது தந்தை காலமானார். 12 வயது இருக்கும்போது அவரது தாயார் மறுமணம் செய்துகொண்டார். இதனால் அவரது மாமா வீட்டில் வளர்ந்தார். 15 வயது இருக்கும்போது இராணுவத்தில் சேர்ந்தார். அங்கு அவர் கழுதையை கையாளுபவராக இருந்தார். வெறும் 4 மாதங்களுக்கு பிறகு வேலையை விட்டு வீடு திரும்பினார்.

KFC

அவர் முதல் பாதி வாழ்க்கையில்  ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலை என மாறி மாறி செய்தார்.  நீராவி இரயில் என்ஜினில் எரிபொருள் நிரப்புதல், காப்பீடு விற்பனை, விளக்குகளை உருவாக்குதல், டயர்கள் விற்பனை மற்றும் படகு ஓட்டுனர் போன்ற பல வேலைகளை செய்தார்.

1930 யில் 40 வயது இருக்கும்போது Kentucky பகுதியில் Shell Oil நிறுவனத்தின் உணவகத்தை எடுத்து நடத்தினார். அப்பொழுதுதான் பல மூலிகைகள் மற்றும் மசாலாக்களுடன் சமைக்கப்பட்ட Kentucky Fried Chicken (KFC) சிக்கனை தயாரித்தார். 1956 ல் 105 டாலர்கள் ஓய்வூதியமாக பெற்று அதிலிருந்து விலகினார். 

KFC சிக்கன் உரிமையை உணவகத்திற்கு விற்க முடிவு செய்து, 2 ஆண்டுகள் 1009 முறை நிராகரிப்பிற்கு பிறகு KFC சிக்கன் உரிமையை ஒரு உணவகத்திற்கு விற்றார்.

9 வருடங்களுக்குள் 600 உணவகத்தை KFC  தொடங்கியது. 1965 யில் Brown என்பவருக்கு $2 மில்லியன் டாலர் தொகைக்கு KFC நிறுவனத்தை கேணல் சாண்டர்ஸ் விற்றார்.

1980 சாண்டர்ஸ் இறக்கும் வரை 2.5 இலட்சம் மையில் அவர் பயணம் செய்ததாக Houston பல்கலைகழகம் கூறுகிறது.

Kentucky Fried Chicken (KFC) 123 நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகத்தை கொண்டுள்ளது. McDonald’s பிறகு விற்பனை அளவில் உலகின் இரண்டாவது பெரிய சங்கிலி உணவகம் ஆகும். 

நம்பிக்கை, கனவு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு கேணல் சாண்டர்ஸ் வாழ்க்கை பயணம் ஒரு உதாரணம்.

Please Read Also:

ஜாக் மாசீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த  AliBaba நிறுவனர் ஜாக் மா


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons