ரசனை என்னும் ஒரு புள்ளியில் – பகுதி 3 : சவரச் (shaving) சந்தை

Share & Like

இந்திய மன்னர்கள் பெரும்பாலும் ராணிகளுக்கு இணையாக சிகையலங்காரத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தன் முடியை கொண்டையிட்டு, தலைப்பாகை அணியும் வழக்கம் இருந்தது. பெரிய மீசை அல்லது நன்கு பராமரிக்கப்பட்ட தாடியும் உடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். கிருத்துவிற்கு பிந்தியகாலத்தில், கடல்வழிப் பயணங்களும், பண்டமாற்றும் அதிகரித்த காலகட்டத்தில் ரசனை மாற்றமும் இன்றியமையாததாக இருந்தது.

கி.பி 100 களில் ரோமச் சக்கரவர்த்தி ஹேட்ரியன் மீண்டும் தாடியுடன் தோற்றமளிக்கும் வழக்கம் கொண்டிருந்தான். அதையடுத்து காண்ஸ்டண்டைனுக்கு முன்னால் வந்த எல்லா ரோம மன்னர்களும் தாடி வைத்த ஒரு கல்வெட்டையோ அல்லது ஓவியத்தையோ தங்களது வரலாற்றுப் பதிவாகவிட்டுச் சென்றார்கள்.

shaving market

கி.பி 840 களில் ஸ்பெயின் (Spain) நாட்டில்தான் உலகின் முதல் அழகியல் கலையைப் பயிற்றுவிற்பதற்கென்றே பிரத்தியேகமான ஒரு கல்வி நிறுவனம் பாக்தாதைச் சேர்ந்த ஒரு பிரபல பாடகரால் தோறுவிக்கப்பட்டது. இங்கே பல நாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் எப்படி வேண்டாத முடியை அகற்றுவது, வாசனை திரவியங்களைத் தயார் செய்வது, பற்பசை தொடங்கி சகலமும் எப்படி உற்பத்தி செய்வது, உபயோகிப்பது போன்றவற்றில் வல்லுனரானார்கள்.


Please Read Also:

 

mukesh ambani

முகேஷ் அம்பானியிடமிருந்து கற்க வேண்டிய 10 பாடங்கள்


கி.பி 1066 களில் ஓர் வினோதனாமான போர் உத்தியை நார்மன் (Norman) மன்னன் வில்லியம் (William) இங்கிலாந்துக்கு எதிரான போரில் மேற்கொண்டான். தன் படைவீரர்கள் அனைவரையும் முன் மண்டையை முழுதாக மழித்து, பின் குடுமியுடன், சாதாரண உடையில் முன்னேறிப்போகச் சொன்னான். இங்கிலாந்தின் ஹரோல்ட் (Harold) மன்னனின் ஒற்றர்களுக்கு கண்கண்ட தூரம்வரை எதிரியின் படைகள் எதுவும் தென்படவில்லை. அதனால் சில பாதிரியார்கள் அல்லது பிக்குக்கள்தான் அங்கே கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் துப்பு கூறினர்.

ஏனென்றால் சமகாலத்தில் புத்த பிக்குக்கள் போன்ற முற்றும் துறந்தவர்கள்தான் அப்படித் தோற்றமளிப்பார்கள். தப்புக் கணக்குப் போட்ட ஹரோல்ட்ன் படை மண்ணைக் கவ்வியது.

ஜைன மதத்தில் துறவு வாழ்க்கைக்கு நியமனம் செய்தவர்கள் ஒவ்வொரு முடியாக ரோமக்கால் வரை கையாலேயே பிய்த்து எடுக்கும் சடங்கு நடைமுறையில் இருந்தது. நீ என்ன பெரிய பிடுங்கியா? என்பதற்கு நீ என்ன அவ்வளவு மன வலிமையும் உடல் திடமும் கொண்ட முனியா என்று பொருள். இன்று நாம் அந்தப் பதத்தைப் பயன்படுத்துவது வேறு அர்த்தத்தை மனதில் கொண்டு.
சென்ற பகுதியில் பார்த்ததுபோல தினமும் சவரம் (shaving) செய்தல் என்பது சுறுசுறுப்பு மற்றும் சுத்தத்தின் அடையாளம் என்று நம் ஆழ்மனதில் வெற்றிகரமாகப் பதிய வைத்து தங்கள் பொருளை சந்தைப்படுத்திவிட்டார்கள்.

7 o’ Clock என்ற பெயரிலும் இந்தியாவில் ஜில்லட் (gillette) நிறுவன பிளேடுகளே கோலோச்சியுள்ளன. ஜில்லட்டுக்கு நிகரான ஒரு இந்திய பிளேடும் (blade) இல்லை. வில்கின்ஸன் சுவார்டும் (Wilkinson Sword), ஜில்லட்டுடன் (gillette) இணைந்து இந்திய சந்தையில் பெரும் அளவிலான தயாரிப்பில் ஈடுபடுகிறது.

அதனால் அன்றாடம் ஒவ்வொரு நாள் நாம் சவரம் (shave) செய்வதன் மூலம் அந்த விற்பனையினால் கிடைக்கும் உரிமத்துக்கான வருவாயின் மூலம் அமெரிக்காவிற்கு நாம் ஒரு வகையில் கப்பம் கட்டிக்கொண்டுள்ளோம் என்றால் அது மிகையல்ல.

மாற்று என்பது சிறிய வடிவ மாற்றங்களுடன் நாமும் ஒரு பிளேடைத் தயாரித்து சுதேசி பிளேடுகளையே வாங்குங்கள் என்று காந்திய வழியில் போராடுவதுதான். ஆனால் இன்று பாரம்பரியத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பேரில் மீண்டும் தாடி வளர்க்கும் கலாச்சாரம் இந்தியாவில் பரவலாகி வருகிறது.

கற்காலத்துக்கு முந்தைய காலத்தில் தோன்றிய இந்தியக் கடவுள்களின் கையில் மழு எனும் கோடாரி போன்ற எஃகினால் ஆன ஆயுதம் உள்ளது. ஆனாலும் நம் மன்னர்களும், அவதாரப் புருஷர்களும் தாடியுடனேயே தோற்றமளித்தனர்.

ஆகவே உலகின் முதல் நாகரிகங்கள் தோன்றிய சிந்து சமவெளி பாரம்பரியத்தில் வந்தவர்களாயினும் தாடிதான் நம் அடையாளம். ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த மரப்பாச்சி பொம்மைகளில் உள்ள மனிதர்கள் கூட தாடியுடனே தோற்றமளிக்கின்றனர் என்று நிறுவ நடந்துகொண்டிருக்கும் முயற்சிகள் ஒருபுறமிருகிறது.

gillette
Image credit: youtube

தாடி வளர்க்க ஏதுவான எண்ணை, மெழுகுப்பசை (Wax), மற்றும் சோப்பை USTRAA என்ற நிறுவனம் பெரிய அளவில் வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தி வருகிறது.

கூடிய சீக்கிரம் பதஞ்சலி நிறுவனம் சவரம் சார்ந்த பொருட்களின் சந்தையில் நுழைந்தால், மேலும் இந்தியச் சந்தையில் உள்ள ப்ராக்டர் & கேம்பிள் (Procter & Gamble) மற்றும் ஹிந்துஸ்தான் லீவர் (Hindustan Unilever) போன்ற நிறுவனங்களுக்கு  மேலும் நெருக்கடி உண்டாகலாம்.

காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே உலகின் மற்ற நாகரிகங்கள் எப்படி நம் ரசனையை மெல்ல மெல்ல மாற்றி வந்துள்ளன என்பதை அடுத்த பகுதியில் ‘ரோம் நகரின் ரோமிங் சிம்மா நாம்?’ என்ற கட்டுரையில் பார்ப்போம்.


Please Read Also:

freshdeskவழக்கமான நேர்முகத் தேர்வு என்ற விதியை உடைத்தெறியும் FreshDesk நிறுவனம் : பாராட்டப்பட வேண்டிய நிறுவன காலாசாரம்


 

Share & Like
Karthikeyan Pugalendi
Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications.
I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles.

My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.
Karthikeyan Pugalendi on FlickrKarthikeyan Pugalendi on Google

Karthikeyan Pugalendi

Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications. I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles. My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.

Show Buttons
Hide Buttons