Y Combinator : அதன் Accelerator Programme Summer 2016 Batch க்காக 3 இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது

Share & Like

அமெரிக்காவைச் சேர்ந்த startup accelerator நிறுவனமான Y Combinator ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான முதல்நிலை முதலீடு (seed funding), ஆலோசனைகள் (advice) போன்றவற்றை வழங்குகிறது. இதற்காக startup accelerator Programme ஐ வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.

Y Combinator
Img Source: chinaz.com

இந்த accelerator Programme க்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலகின் பல நாடுகளிலிருந்து  ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கிறது. Y Combinator நடத்தும் startup accelerator Programme ஸ்டார்ட் அப் உலகில் ஒரு முக்கியமான  accelerator Programme ஆகும். 

Y Combinator அதன் Accelerator Programme Summer 2016 Batch க்காக 3 இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது. Co-working space Innov8, self-drive car rental app JustRide, and   an app for sellers on Facebook and WhatsApp Meesho ஆகிய 3 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்தேடுத்துள்ளது.

Y Combinator Accelerator Programme அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலியில் 3 மாதங்கள் நடைப்பெறவுள்ளது. 2005 முதல் இதுவரையில் 1,000 க்கு மேற்பட்ட startups நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இந்த ஆண்டு அதிகப்பட்சமாக 107 startup நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

Y combinator funding
Source: inc42

Y Combinator தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள startup நிறுவனங்களில் பொதுவாக $120,000 டாலர் முதலீடு செய்து 7% பங்குகளை வைத்துக்கொள்ளும். இந்த Accelerator Programme யில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் Y Combinator இடமிருந்து ஆலோசனைகளை (advices) பெறமுடியும். மேலும் startup நிறுவனர்கள், venture capitalists, வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் (entrepreneurs), புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேர்ந்த நிர்வாகிகள், வல்லுநர்கள், ஆலோசகர்கள் ஆகியோர் பங்குப்பெறும் வாராந்திர இரவு உணவு விருந்தில் கலந்துகொள்ளலாம். தேர்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் அவர்களின் ஆலோசனைகள் மற்றும் முதலீட்டை (funding) பெற முடியும்.

Y Combinator Accelerator Programme நிகழ்ச்சி இறுதியாக நடைப்பெறும் Demo Day யுடன் முடிவடையும். இந்த Demo day யில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களை பற்றிய pitch களை வழங்கும்.


Please Read Also:

airbnb

 முதலீட்டாளர்களால் நிராகரிக்கப்பட்ட Airbnb ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு $ 30 பில்லியன் டாலர்


YC ன் தலைவர் சாம் அல்ட்மன் (Sam Altman) TOI க்கு அளித்த பேட்டியில் “இப்போது அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிருவனங்களிருந்து அதிகமான விண்ணப்பங்கள் வருவதாகவும், இது UK மற்றும் கனடா நாடுகளை விட அதிகம்” எனவும் தெரிவித்தார். மேலும் “இந்தியா உலகஅளவில் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்துவரும் சந்தை எனவும், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் $ 10 பில்லியன்டாலர் மதிப்புடைய பல நிறுவனங்கள் தொடங்கப்படும் என நம்புவதாக தெரிவித்தார்”.

 Y Combinator முதலீடு செய்த முக்கிய நிறுவனங்கள் 

Dropbox, Airbnb, Coinbase, Stripe, Reddit, Zenefits, BuildZoom, Instacart, Twitch.tv, Machine Zone, Weebly, Chinese startup Raven Tech ஆகியவை YC முதலீடு செய்த முக்கிய நிறுவனமாகும். 

இந்தியாவைச் சேர்ந்த online tax return filer நிறுவனமான ClearTax, Payment gateway நிறுவனமான RazorpayZipphone ஆகிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் Y Combinator முதலீடு செய்துள்ளது.


Please Read Also:

Uber

 உலகின் மிகவும் அதிக மதிப்புடைய 15 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons