பிசினஸ் துரோணாச்சாரியாவும் அவரது ‘தொழில் போர்’ எனும் தொடர் நிகழ்ச்சியும் – ஓர் அறிமுகம்
பிசினஸ் துரோணாச்சாரியா குணசீலன், ‘தொழில் போர்’ (War Of Business) எனும் பெயரில் ஒரு தொழில் முன்னேற்ற தொடரை தமிழில் Facebook, Whatsapp மற்றும் TamilEntrepreneur.com -ல் ஒளிபரப்பி வருகிறார்.
பிசினஸ் துரோணாச்சாரியா குணசீலன் குடும்ப தொழில்களுக்கு ஆலோசனை வழங்கும் பிசினஸ் துரோணாச்சாரியா (Business Dhronacharya) எனும் நிறுவனத்தை கடந்த 5 வருடங்களாக மும்பை மற்றும் சென்னையில் நடத்தி வருகிறார். இவர் இந்தியாவின் புகழ் பெற்ற BITS, Pilani மற்றும் IIM, Ahemadabadல் தொழில் மேலாண்மை படித்தவர்.
அதன் பின், விப்ரோ போன்ற நிறுவனங்களிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பணிபுரிந்து அங்கு உள்ள பன்னாட்டு சந்தை அனுபவமும் பெற்றவர். அதன்பின் குடும்ப தொழில்களுக்கு ஆலோசனை வழங்குவதை தனது விருப்ப தேர்வாக தேர்வு செய்து இந்த நிறுவனத்தை துவக்கினார்.
இவர் “தொழில் ஆத்திசூடி” எனும் நெடுந்தொடரை நாணயம் விகடன் இதழில் எழுதியுள்ளார்.
இவரது பேட்டிகள் பல வார இதழ்களில் வந்துள்ளது. மேலும் தொழில் சம்பந்தமான தொலைக்காட்சி விவாதங்களில் NDTVல் கலந்து கொண்டுள்ளார். மும்பை மற்றும் டெல்லியில் நடைபெற்ற பல தொழில் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு இந்தியாவில் குடும்ப தொழில்கள் மற்றும் தனி மனித முதலீட்டு தொழில்களின் முன்னேற்றம் தொடர்பாக உரையாற்றி இருக்கிறார்.
தமிழில் இது ஒரு புது முயற்சி. இனி நாம் பிசினஸ் துரோணாச்சாரியாவின் நிறுவனம் பற்றியும், தொழில் போர் online தொடர் பற்றியும் குணசீலன் அவர்களிடம் பேசலாம்…….
நீங்கள் குடும்ப தொழில்களுக்கான தொழில் ஆலோசகர் என்ற துறையை தேர்ந்தெடுத்தது ஏன்?
பிசினஸ் துரோணாசாரியா: சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில்கள் என்று இந்திய அரசு நெடுங்காலமாக சொல்லி வந்தாலும், இவையனைத்தும் தனிமனித முதலீடு அல்லது ஒரு கூட்டு குடும்பத்தின் முதலீடு தான்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களே இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவில் சுய சார்பான பொருளாதார முன்னேற்றம் வேண்டுமென்றால் இந்த குடும்ப தொழில்களின் முன்னேற்றம் மிக முக்கியம்.
இதற்கான காலம் இது என்று நான் நம்புகிறேன். எனவே இந்த துறையை நான் தேர்ந்தெடுத்தேன்.
பெரிய கார்பரேட் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பெரிய வளர்ச்சியை அடைவதால் தான் நம் நாடு வளர்ச்சி அடைவதாக சொல்லப்படுகிறதே?
நான் நம் நாட்டை சார்ந்த பெரிய நிறுவனங்களை குறை சொல்லவில்லை, ஆனால் அந்நிய முதலீடு எனும் டைனோசாரை மட்டுமே குறை சொல்கிறேன். முதலீடு எங்கிருந்து வருகிறதோ அங்குதான் வளமும், வருமானமும் போய் சேரும் என்பது பொருளாதார அறிவுள்ள யாருக்கும் எளிதாக புரிய கூடிய உண்மை.
அதே நேரத்தில், நமது நாட்டு தொழில் அதிபர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவும், தொழில் செய்யவும் தயங்குவதாலேயே நம் அரசு வெளி நாட்டில் கையேந்துகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
தொழில் போர் என்ற தொழில் முன்னேற்ற நெடுந்தொடரை இலவசமாக வளங்கி வருகிறீர்கள், இந்த ஐடியா எப்படி வந்தது?
மும்பையில் பல தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் போதும் அங்கு பல மேடைகளில் பேசிய போதும் அங்கெல்லாம் (வட இந்தியாவின் பல பகுதிகளில்) பெரும் தொழில் மாற்றங்களும் அதற்கான முனைப்புகளும் இருப்பதை கண்டேன்.
ஆனால் தமிழ் நாட்டில் இன்னும் தொழிலில் மாற்று சிந்தனை புதிய முயற்சி பெரிய அளவில் பரவலாக முன்னெடுக்கப் படவில்லை என்பதை உணர்ந்தேன்.
நாம் காலத்திற்கு தகுந்த முறையில் நவீன சிந்தனையோடும் செயலோடும் தொழில் செய்யவேண்டும் என்பதை இங்குள்ள தொழில் செய்வோர் அனைவர் மனதிலும் ஏற்படுத்தவே அந்த நிகழ்ச்சியை தமிழில் நடத்துகிறேன்.
தொழில் போர் தொடரின் முகப்பு பாடல் ” உலகில் இந்திய ரத்தம், தொழிலில் முந்திய ரத்தம் ஆகட்டும்” எனும் Title Song கேட்க்கும் போது மிகவும் உத்வேகம் கொடுப்பதாக உள்ளதே….அதைப்பற்றி…
அந்த பாடல் நான் எழுதியதுதான். அந்த பாடலை இசையோடு கேட்க்கும்போது உங்கள் அடிமனதில் உள்ள தொழில் பற்றிய அத்தனை கனவுகளும் உங்கள் உடலெங்கும் பரவி உணர்சிகளை தூண்டுகிறது இதனால் நீங்கள் புதிய உத்வேகம் பெறுகிறீர்கள்.
95661 72052 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கும் அனைவருக்கும் இந்த தொடரும் வாரவாரம் whatsapp ல் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் நீங்கள் TamilEntrepreneur.com லும் தொழில் போர் தொடர் நிகழ்ச்சி காணொளியை பார்க்கலாம்.
PLEASE VISIT ALSO : தொழில் போர் – Episode