மார்க் கியூபனின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான 12 விதிகள்
மார்க் கியூபன் அமெரிக்க தொழில் அதிபர், முதலீட்டாளர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை உள்ளவர். இவர் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக 12 விதிகளை கூரியுள்ளார்.

- நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில் மீது உங்களுக்கு தீவிர காதல் இல்லையெற்றாலும், அது உங்கள் மனதை ஆட்டிபடைக்கவில்லையெற்றாலும் அந்த தொழிலை தொடங்காதீர்கள். நாம் செய்ய இருக்கும் விசயத்தின் மீது காதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.
- உங்கள் தொழில் எதிர்மறையாக செல்லும்பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் எண்ணம் இருந்தால் உங்கள் தொழிலின் மீது உங்களுக்கு காதல் இல்லை அர்த்தம்.
- உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்தெடுங்கள்.
- உங்கள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டபோகிறது, எப்படி விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதை தெரிந்து வைத்துகொள்ளுங்கள்.
- உங்கள் திறமைகளை தெரிந்து வைத்துகொள்ளுங்கள். அந்த திறமைகளை உயர்த்துவதற்கு கவனம் செலுத்துங்கள்.
- ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது, உங்கள் ஊழியர்களுக்கு நிறுவனத்தில் வேலை பார்ப்பது பிடிக்குமானால், நேரத்தை எப்படி பயனுள்ளதாய் செலவழிப்பது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். விருப்பம் இல்லாத ஊழியர்கள் நேரத்தை வீணாக்கிவிடுவார்கள்.
PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்
- திறந்த அலுவலக இடத்தை அமைத்திடுங்கள், அப்போதுதான் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதை தெரியவரும், இது அவர்களின் ஆற்றலை அதிகபடுத்த உதவும்.
- உங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள், உங்கள் ஊழியர்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதியுங்கள்.
- நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குங்கள். யார் யாரிடம் அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என்பதை வரையருங்கள்.
- ஆடம்பரமான பொருட்களை வாங்காதீர்கள்.
- உங்கள் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்வதற்கு பொது தொடர்பு நிறுவனத்தை (PR Firm) பயன்படுத்தாதீர்கள். உங்கள் நிறுவனத்தின் மூலம் நீங்களே அவர்களை தொடர்புகொள்ளுங்கள்.
- உங்கள் ஊழியர்களின் வேலையில் வேடிக்கை, பொழுதுபோக்கு போன்றவற்றை புகுத்துங்கள்