[VIDEO] நிறுவனத்தை முன்னேற்றும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்
தொழில்முனைவோர்கள் நிறுவனத்தை தொடங்கும் போதும், முன்னேற்றும் போதும் ஆயிரம் சவால்களை சந்திக்கவேண்டி வரும். நிறுவனம் வளர்கிற போது நாம் பலவித தவறுகளை செய்வோம். நிறுவனம் தொடங்கும் போதும், அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்லும்போதும் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சரியான ஊழியர்களை தேர்ந்தெடுப்பது, நிறுவன உத்திகள் (develop strategies), திட்டங்கள் வகுப்பது (plans), நிறுவனத்தில் கலாசாரம் (Culture) உருவாக்குவது, மேலாண்மை (Management), நிதிகள் (financials), முதலீடு (Capital) போன்ற பலவற்றில் கவனமாக இருக்கவேண்டிய அவசியம் பற்றி இந்த வீடியோவில் விவாதிக்கப்படுகிறது.
நிறுவனத்தை அடுத்தகட்ட நிலைக்கு எடுத்து செல்லும் போது எந்த விசயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்பதை இந்த காணொளியில் Lightspeed VP நிறுவனத்தைச் சேர்ந்த பாரி எக்கர்ஷ், Box நிறுவனத்தைச் சேர்ந்த டான் லெவின், GoodData நிறுவனத்தைச் சேர்ந்த ரோமன் ஸ்டானேக், Charles River Ventures நிறுவனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் சக்கரி போன்றோர்கள் விவாதிக்கிறார்கள்.
PLEASE READ ALSO : Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்