ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
ரிசர்வ் வங்கி இன்று கடன் கொள்கை மற்றும் நிதிநிலை ஆய்வறிக்கை வெளியிட்டது. இதில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை .
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் Repo Rate (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமின்றி 6.75%, வங்கிகளுக்கான வட்டி விகிதம் Reverse Repo Rate (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 5.75%, வங்கிகள் ரிசர்வு வங்கியிடம் வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் (CRR (Cash Reserve Ratio) ) 4 சதவீதமாகவே இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வங்கிகள் வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது.
2016-ம் ஆண்டு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாகவும், 2017-ம் நிதியாண்டில் 7.6 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டுக்குப் பிறகு நிதிக் கொள்கையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
PLEASE READ ALSO : CRR (Cash Reserve Ratio), Repo Rate, Reverse Repo Rate, Bank Rate, SLR (Statutory Liquidity Ratio) ஆகியவற்றின் விளக்கங்கள்