வங்கிகளுக்கான ரெபோ விகிதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
2016-17 ஆண்டுக்கான முதல் ரிசர்வ் வங்கி கொள்கை நிர்ணயிக்கும் கூட்டம் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி (Reserve bank) ரெபோ விகிதத்தை 0.25% குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் வாங்கும் குறுகிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் ரெபோ ரேட் (Repo Rate) எனப்படுகிறது.
ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் வாங்கும் குறிகிய கடனுக்காக (Short term loan) செலுத்த வேண்டிய வட்டியான ரெபோ ரேட் 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிஆர்ஆர் (CRR) எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் (Cash Reserve Ratio) 4% என்கிற அளவிலேயே தொடர்கிறது. வங்கிகளின் ரொக்க கையிருப்பின் தினசரி விகிதம் 95 சதவீதத்திலிந்து 90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
2016-17 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி (Growth Rate) 7.6% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. மேலும் ரெபோ ரேட் விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது வீட்டுக் கடன் (Home loan), தனி நபர் கடன் (Personal loan), வாகனக் கடனுக்கான (Vehicle loan) வட்டி விகிதங்களை (interest rate) வங்கிகள் உடனே குறைக்கும். வட்டி குறைந்தால் இ.எம்.ஐ. (EMI) -யில் செலுத்தும் தொகையும் குறையும்.
PLEASE READ ALSO : CRR (Cash Reserve Ratio), Repo Rate, Reverse Repo Rate, Bank Rate, SLR (Statutory Liquidity Ratio) ஆகியவற்றின் விளக்கங்கள்