மத்திய பட்ஜெட் 2016-17: தொழில் துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது மத்திய பட்ஜெட்டை 2016-17 திங்கள்கிழமை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைகளுக்கு பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய பட்ஜெட் 2016-17: தொழில் துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள்:
- இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.
- இந்தியாவை உற்பத்தி சமுதாயமாக மாற்றுவதற்கான கல்வித் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குதல்.
- சிறு தொழிலில் கடன் வழங்க முத்ரா திட்டத்திற்கு ரூ.1.8 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கிக் கடன் திட்டத்தில் இதுவரை 2.5 கோடி பேருக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
- ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா (Start Up India, Stand Up India) திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பொதுத்துறை வங்கிகளின் மேம்பாட்டுக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீடு.
PLEASE READ ALSO : Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
- ஸ்டார்ட் அப் திட்டங்களை (Start Up India, Stand Up India) ஊக்குவிக்கும் வகையில் கம்பெனி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
- தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மற்றும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தொழில்மையம் அமைக்கப்படும். ஸ்டாண்ட் அப் இந்தியா (Start Up India, Stand Up India) திட்டத்தின் மூலம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறனை கூட்டும் வகையில் நாடு முழுவதும் ரூ.1700 கோடி செலவில் 1500 பன்முக திறன்சார் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
- இளம் தொழில்முனைவோர்களை உருவாக்க 2200 கல்லூரிகள், 500 அரசு ஐடிஐ, 300 பள்ளிகள், 50 தொழிற்பயிற்சி மையங்களில் ஆன்லைன் மூலம் தொழில் படிப்புகள் தொடங்கப்படும்.
- புதிய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ஊழியர்களுக்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சந்தா தொகையை முதல் 3 ஆண்டுகளுக்கு அரசே செலுத்தும்.
- பெரிய ஷாப்பிங் மால்களை போன்று சிறிய கடைகளும் வாரத்தின் 7 நாட்களும் திறந்திருக்க அனுமதி வழங்கப்படும்.
- புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பு.
- உணவு உற்பத்தி துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுமென மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.