டிஜிட்டல் இந்தியா $1 ட்ரில்லியன் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் : தகவல் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
அமெரிக்காவின் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஹார்வர்ட் கென்னடி பள்ளி ஏற்பாடு செய்த இந்திய 2016 ஆண்டு மாநாட்டில் தகவல் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் டிஜிட்டல் இந்தியா (Digital India) திட்டம் $1 ட்ரில்லியன் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, தொலைத்தொடர்புத் துறை (Telecoms), தகவல் தொழில்நுட்ப துறைகள் (IT/ITES) மற்றும் மின்னணு உற்பத்தி (Electronics Manufacturing) போன்றவைகளின் தேவைகள் அதிகரித்து அவற்றின் தொழில் வாய்ப்பு உருவாகும். இந்திய மக்கள் தொகையில் 65% மக்கள் 35 வயதுக்குள் உள்ளனர். இதனால் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சி வேகமாகும்.
PLEASE READ ALSO: வாடிக்கையாளர்களை பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதை ஒரு பழக்கமாக மாற்றுங்கள்
மோடி தலைமையிலான அரசாங்கம் மிகவும் மேம்பட்ட பிராட்பேண்ட் உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இது இ-கல்வி (e-education) மற்றும் இ-சுகாதாரம் (e-health) போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கு வேகமான இணையதள விநியோகங்களை வழங்கும். மேலும் நாடு தழுவிய ஆப்டிகல் பைபர் கேபிள் (Optical Fiber) பதிக்கப்பட்டு வருகிறது இது அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் இணைக்கும். குடிமக்களுக்கு குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு டிஜிட்டல் பங்கிடுதளில் உள்ள இடைவெளியை இணைக்க டிஜிட்டல் இந்தியா ஒரு பாலமாக அமையும் என்று கூறினார்.
மேலும் அவர் மானியங்களை நேரடியாக ஏழைகளின் வங்கி கணக்குகளில் கொண்டு சேர்க்க டிஜிட்டல் பயன்படுகிறது. இப்போது போலியாக மானியங்கள் கோருபவர்கள் குறைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
PLEASE READ ALSO: பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் TrueBil