எதையும் கஷ்டப்பட்டு செய்யாதீர்கள்

Share & Like

               willingness to work                     சாதாரண விசயத்தைக்கூட  நீங்கள் கஷ்டப்பட்டுதான் செய்வீர்கள் என்றால் அதற்குப் பெயர் திறமைக் குறைவு என்பதுதானே அன்றி கடின உழைப்பு  என்பது அல்ல . ஒரு வேலையை கடினம் என்று நீங்கள் நினைக்கின்றபோதே அதை நீங்கள் இஷ்டப்பட்டு செய்யவில்லை என்பதாகதானே  அர்த்தம் . தாங்கள் அனுபவித்துச் செய்கிற எந்த வேலையையும் கஷ்டப்பட்டு செய்ததாய் வெற்றி பெற்றவர்கள் சொல்வதில்லை 

 
                எழுத்தாளர் சுஜாதாவிடம்  “இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீகளே .. உங்களுக்கு இது கஷ்டமாக இல்லையா “ என்று கேட்டதற்கு ,”இதை வேலையாகச் செய்கிறவனுக்குத்தான் இது கஷ்டம். நான் எனது விருப்பமாக இதைச் செய்கிறேன்” என்றார் . விருப்பத்தோடு செய்கிறயாரும் “மிகக் கடினம் ” என்று அங்கலாய்த்துக் கொள்வதில்லை. 
 
                “கஷ்டப்பட்டு உங்களை யார் அந்த வேலையைப் பார்க்கச் சொன்னது? இதே வேலையை இஷ்டப்பட்டு செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்களே. அவர்களிடம் அதை விட்டு விடலாமே. 
 
          ஒரு வேலையை விரும்பி செய்கிறபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை . வருந்தி செய்கிறபோது உங்கள் கஷ்டம் பல மடங்காகிறது . நீங்கள் அழுதாலும்,புரண்டாலும் ஒரு   வேலையை  நீங்கள்தான்  செய்தாக வேண்டும் என்றால் ஏன் அதற்காக அழ வேண்டும். அதை ரசித்து செய்தால் நீங்கள் ஆசைப்படுகிற விஷயம் உங்களுக்கு மிகவும் அருகில் வரும். 
 

  –நன்றி : C.B.A. முத்துமணி-  CDISSIA

<

Share & Like
Chennai District Small Scale Industries Association
CDISSIA : Chennai District Small Industries Association (cdissia) is a non-Governmental organization with the sole objective of serving the SSI Sector without any profit motive.
The Association seeks co operation from all the small scale industries situated in the district to become members,

Chennai District Small Scale Industries Association

CDISSIA : Chennai District Small Industries Association (cdissia) is a non-Governmental organization with the sole objective of serving the SSI Sector without any profit motive. The Association seeks co operation from all the small scale industries situated in the district to become members,

Show Buttons
Hide Buttons