தேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்
யாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம், அதில் எனக்கு கிடைத்த மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்வு தான், உடையில் தமிழ். ஆமாங்க, சரியாக தான் படிச்சீங்க, பலர் பெயர் பலகை, கையில் எழுதிய குறிப்புக்கள், உடம்பில் வர்ணம் என தன் தமிழ் வெளிப்பாட்டை கொணர, நம் அணியும் ஆடையில் பாரதியின் “வீழ்வேனென்று நினைத்தாயோ” சில நொடிகள் காண்பது கனவா என எண்ணினேன், உண்மை என உணர்ந்த மறு நொடியே அவர்களிடம் சென்று இதைப் போல் ஒரு ஆடை எனக்கும் செய்து தரமுடியுமா என மெல்லமாக கேட்டேன், அவர்கள் பார்த்த பார்வை நான் ஏதோ அவர்களிடம் “பத்து கோடி” கடன் கேட்டவன் போல் இருந்தது, அந்த பார்வையும் சிரிப்பும் இன்றும் என் நினைவில் இருக்கிறது.
அவர்கள் சிரித்து விட்டு கூறியது, “பலர் தங்கள் தமிழ் கலாச்சார ஆர்வத்தை இன்று ஜல்லிக்கட்டில் வெளிப்படுத்துறாங்க ரொம்ப சந்தோசமா இருக்கு” என மீண்டும் சிரித்து விட்டு, மேலும் தொடர்ந்தனர் கோபியும் (26), சுந்தரும் (22) இது எங்கள் நிறுவனம் வில்வாவின் (Vilva) தயாரிப்பு, முழுக்க முழுக்க தமிழக தயாரிப்பு (Made in தமிழ்நாடு), எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தமிழ் மொழியில் ஆடை இருக்கிறதா? சிறிய தேநீர் இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடர்தனர் நம் தமிழ் பட்டதாரி இளைஞர்கள், இனி அவர்கள் சொல்ல நாம் பயணிப்போம்.
அவர்களுடன் வில்வா தமிழில், “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி”, நம் தமிழ் குடி; ஆறு கோடி மக்கள் பெருமை கொள்ளும் மொழி நம் தமிழ் மொழி. இப்படி பெருமை உள்ள நம் மொழி நமக்கு மட்டும் தெரிந்தால் போதுமா? இந்த எண்ணத்தில் எழுந்தது தான் “வில்வா தமிழ் ஆடைகள்” (Vilva Clothings) ஒரு மாபெரும் தமிழ் ஆடைகள் வியாபார குறியீடு (Clothing Brand) உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழில் ஆடைகள் நாமே வடிவமைத்து, உற்பத்தியும் செய்து வருகிறோம்.
ஆடைகளை உலகம் முழுக்க விற்பனை செய்ய www.tamiltshirts.in என்ற இணையதளம் பெரிதும் உதவி வருகிறது. அர்த்தமே புரியாமல் நாம் அணிந்து இருந்த ஆடைகள் பல இருக்க, நமக்கு தெரிந்த நம் தமிழ் மொழியில் ஆடைகள் இருப்பது பெரிய வரவேற்பை கொடுத்தது.
நம் மொழியின் பெருமை நம் அணிவதில் கிடைக்கும் இன்பம் வேர் எதிலும் வராது என்பது வாடிக்கையாளர்கள் கருத்தாகும். என்ன தான் நமக்கு தெரிந்த தமிழே என்றாலும், அதிலும் இக்காலத்திற்கு ஏற்றார் போல் வடிவம் வேண்டும், அதில் பெரிதும் நேரம் செலவிடுகிறோம்.
பாரதியின் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ”, “அச்சம் தவிர்”, “ரௌத்திரம் பழகு”, திருவள்ளுவரின் திருக்குறள் ஏந்திய ஆடைகள், கட்டிட கலைச் சான்றான தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சி கோவில், மாமல்லபுரம் சிற்பங்கள், குடவரை கோவில் என நமது தமிழ் ஆர்வம் நீள்கிறது.
தற்போது நமது www.tamiltshirts.in -ல் ஆர்டர் செய்யும் அனைவர்க்கும் கூரியர் மூலம் இந்தியா முழுதும் அனுப்பி வருகிறோம், இதை தவிர இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். தற்போது எங்கள் முதல் விற்பனையகம் (Showroom) சென்னை கொடுங்கையூர் பகுதியில் தொடங்கி வெற்றிகரமாக அகத்திலும் இணையத்திலும் விற்பனை செய்து வருகிறோம்.
மேலும் இதுபோன்ற விற்பனையகங்கள் சென்னையின் மற்ற பகுதியிலும், மற்ற நகரங்களிலும் விரிவு செய்யும் வேலைகளும் செய்துவருகிறோம் ! 2020- க்குள் 15 கிளைகள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் திறக்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் உள்ளோம். பின்னாளில் உலகம் முழுதும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தமிழ் மற்றும் தமிழின் ஆற்றலை கொண்டு சேர்ப்போம் என வில்வா குழுமம் சார்பாக உறுதி அளிக்கிறோம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்
இவர்களின் உறுதியான தமிழ் மற்றும் அதனின் கலாச்சாரம் காணும் போது எனக்கும் நம்மை போன்றோருக்கும் தமிழ் மேல் இன்னும் பெரிய அளவில் நம் மொழி பயணிக்கும் என நம்பிக்கை பெருகும், என நாங்கள் நம்புகிறோம்.
Please Read This Article :
உங்களின் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி ?