உலககெங்கும் வாடிக்கையாளர்களை அதிகரிக்க உதவும் Virtual Phone Number தொழில்நுட்பம்:

Share & Like

virtual phone number9    தொழில் நிறுவனங்களின் தொலைபேசி தொடர்பு எண்கள் (Contact Number) பெரும்பாலும் அவர்களின் இடத்தை சார்ந்ததாக இருக்கும். இது உள்நாட்டில் மட்டும் வாடிக்கையாளர்களை(Local Customer) கொண்ட நிறுவனங்களுக்கு இந்த வழக்கமான தொலைபேசி எண்கள் (Traditional Phone Number) ஏற்றதாக இருக்கும். ஆனால் உலக அளவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு உள்நாட்டைச் சார்ந்த தொலைபேசி தொடர்பு எண்கள் மட்டும் போதாது. வெளிநாடுகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் பல நாடுகளில் கிளைகள் திறப்பது இயலாத காரியம். அந்த நிறுவனங்கள் தங்களுக்கு பல நாடுகளில் கிளைகள் உள்ளது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது அவசியம்.இது வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் (Overseas Customer) நம்பிக்கையை பெற உதவும்.

   வெளிநாடுகளில் கிளைகள் உள்ளது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த, பல நிறுவனங்கள் தங்களின் தொலைபேசி எண்ணை தேவைப்படும் நாட்டின் உள்ளூர் தொலைபேசி எண்கள் (local Number) போல் அமைக்கின்றன. பல நாடுகளில் தொலைபேசி எண்களை அமைப்பதற்கு Virtual Phone Number என்ற தொழில்நுட்பம் பயன்படுகிறது.

Virtual Phone Number:

    Virtual Phone Number என்ற தொழில்நுட்பத்தில் எந்த நாட்டின் தொலைபேசி எண்ணையும் பெறலாம். Virtual Phone Number தொழில்நுட்பம் VOIP(Voice over IP) என்ற இணையம் சார்ந்த தொழில்நுட்பத்தின் மூலமாக செயல்படுகிறது. Virtual Phone Number தொழில்நுட்பம் VOIP(Voice over IP(Internet Protocol)) மற்றும் Public Switched Telephone Network (PSTN)(வழக்கமான தொலைபேசி தொடர்பு) என்ற இரு தொழில்நுட்பங்களின் வழியாக செயல்படுகிறது. Virtual Phone Number-ல் இரண்டு வகைகள் உள்ளது.

1.Virtual local numbers- உள்ளூர் தொலைபேசி எண்களை பயன்படுத்துவது (which use a regular local landline or mobile phone number as the virtual number),

2.Virtual toll-free numbers- கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்துவது (which use a normal toll-free phone number as the virtual number)

    உதாரணத்திற்கு 1-212-645-5550 என்பது நியூயார்க்கின் (New York) தொலைபேசி எண் , நமது வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில் அதிகம் இருந்தால் அவர்களின் நம்பிக்கை மற்றும் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கு நமது நிறுவனத்தின் தொலைபேசியின் எண்ணையும் அமெரிக்காவின் தொலைபேசி எண் 1-212-645-5660 போல Virtual Phone Number தொழில்நுட்பத்தில் அமைக்கலாம். இந்த Virtual Phone Number-ஐ நாம் விரும்பும் தொலைபேசியின் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம். இந்த Virtual Phone Number-க்கு ஒருவர் ஒரு நாட்டிலிருந்து அழைக்கும் போது, அழைப்பு நமது தொலைபேசிக்கு வரும்.

Virtual Phone Number சேவை வழங்கும் நிறுவனங்கள் :

Virtual Phone Number சேவையை பல நிறுவனங்கள் வழங்குகின்றன.

Virtual Phone Number சேவைக்கான கட்டணம்:

    Virtual Phone Number சேவைக்கான கட்டணம் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். சில நிறுவனங்கள் அமைப்பு கட்டணமாக (Setup Fee) சில தொகையை வசூலிக்கின்றன. இந்த அமைப்பு கட்டணம் Virtual Phone Number தேவைப்படும் நாட்டிற்குத் தகுந்தாற்ப் போல் மாறுபடுகின்றன. உதாரணமாக Sonetel நிறுவனம் அமெரிக்கா நாட்டின் Virtual Phone Number-க்கு அமைப்பு கட்டணமாக (Setup Fee) $.0.99 யும், பிரான்ஸ் நாட்டின் Virtual Phone Number-க்கு அமைப்பு கட்டணமாக (Setup Fee) $1.99 யும், பிரேசில் நாட்டின் Virtual Phone Number-க்கு அமைப்பு கட்டணமாக(Setup Fee) $.4.99 யும் வசூலிக்கின்றது. நமக்கு வரும் ஒவ்வொரு நிமிட அழைப்புக்கும் கட்டணம் (Charges per Min) வசூலிக்கப்படுகின்றது. மற்றும் மாத கட்டணமாக (Monthly Charges) சில தொகை வசூலிக்கப்படுகின்றது.

Virtual Phone Number-ன் பயன்கள்:

  • வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு அவர்கள் நாட்டிலும் நமது நிறுவனத்தின் கிளைகள் உள்ளது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தலாம்.
  • வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெறலாம். உதாரணத்திற்கு நமக்கு ஒரு பொருள் சீனாவிலிருந்து தேவைப்படுகிறதென்றால், அதை விற்கும் நிறுவனத்தின் தொடர்பு எண் சென்னை எண்ணாக (044-42102162) இருந்தால், நமக்கு அந்த நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கை ஏற்படும்.
  • Virtual Phone Number-க்கு ஒருவர் வெளிநாடுகளிருந்து தொடர்புக் கொள்வதற்கான அதற்கான தொடர்புக் கட்டணம் மிகவும் குறைவு. இதுவே நமது வழக்கமான தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தொடர்பு கட்டணம் அதிகம். இது வாடிக்கையாளர்கள் அதிக அளவு தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்.
  • வெளிநாட்டில் வேலை செய்பவர் அவரின் தாய்நாட்டின் Virtual Phone Number-ஐ வாங்கினால், அவரின் உறவினர் மற்றும் நண்பர்கள் அவரின் Virtual Phone Number-க்கு தொடர்பு கொள்ளும்போது, தொடர்பு கட்டணம் உள்ளூர் கட்டணம் அளவிற்கு வசூலிக்கப்படும். (Have family and friends in INDIA but work in USA? Get a virtual phone number in INDIA and they can call you in USA by dialing your INDIA virtual number, just like a local call).
  • பன்னாட்டு நிறுவனம் போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்.
  • உலககெங்கும் விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க (Increase Sales and Customers) இந்த தொழில்நுட்பம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons