Virtual Office தொழில்நுட்பம் : எந்த நாட்டிலும் அலுவலகங்களை குறைந்த செலவில் அமைக்கலாம்

Share & Like

virtual office1
    பெரும்பாலான நிறுவனங்களுக்கு தொழில்லை விரிவுப்படுத்த (Business Expansion) பல்வேறு இடங்களில் (Various Places), பல்வேறு நாடுகளில் (Various Countries) அலுவலகங்களை (Offices) அமைக்க வேண்டிய கட்டாயம், விருப்பம் இருக்கும். சில நிறுவனங்களுக்கு அலுவலகங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்காக மட்டும் தேவைப்படும். அந்த அலுவலகங்களில் எந்தவித நிறுவன செயல்பாடும் நடைபெறாது. இதற்காக தனியாக அலுவலகங்களை திறப்பதற்கான செலவுகள் மிக அதிகமாக இருக்கும். குறைந்த செலவில் நிறுவனத்தின் அலுவலகங்கள் போன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்கு Virtual Office என்ற தொழில்நுட்பம் பயன்படுகிறது. பல நிறுவனங்கள் Virtual Office என்ற முறையை கையாளுகின்றன.

Virtual Office செயல்முறை :

     Virtual Office சேவையை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. Virtual Office என்பது ஒரு நிறுவனத்தின் அலுவலகம் போன்ற அமைப்பை ஏற்படுத்துவதாகும். பல நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்கும், பிரபலமான இடத்தில் அலுவலகம் உள்ளது என்ற பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும் அலுவலகம் தேவைப்படும். இது போன்ற நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் Virtual Office முறையில் அமைக்கலாம்.

Virtual Office சேவை வழங்கும் நிறுவனங்கள் :
Virtual Office சேவையை பல நிறுவனங்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வழங்குகின்றன.

மற்றும் பல நிறுவனங்கள் Virtual Office சேவையை வழங்குகின்றன.

    Virtual Office சேவை வழங்கும் நிறுவனங்கள், அலுவலகம் (Office) தேவைப்படும் நிறுவனங்களுக்கு தொலைபேசி எண்ணையும் (Tele Phone Number), தங்கள் முகவரியை (Office Address) தொடர்பு கொள்வதற்காகவும் அளிக்கும். தேவைப்பட்டால் நிறுவனச் செயல்பாட்டுக்கு குறிப்பிட்ட பகுதி (Physical Space), Internet வசதி போன்றவையும் அளிக்கும். அந்த அலுவலகத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை (Telephone Calls) Virtual Office சேவை வழங்கும் நிறுவனம் எடுத்து (Telephone Answering), அதை அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணிற்கு மாற்றிவிடும் (Call Forwarding). இதேபோல் அந்த அலுவலகத்திற்கு வரும் ஆவணங்கள் (Documents), தபால்களை (Letters) Virtual Office சேவை வழங்கும் நிறுவனம் பெற்றுக் கொண்டு, அதை அந்த நிறுவனத்திற்கு தகவல்களை அளித்துவிடும். அலுவலக இடம் (Office Space) தேவைப்படும் நாட்களிலும் குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    Virtual Office-க்கான சேவை கட்டணம் தேர்தெடுக்கும் package-ஐ பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு தொலைபேசி அழைப்புக்கு பதில் அளித்தல் மற்றும் அலுவலக முகவரியை பயன்படுத்துதல் ( Remote Reception + Call Answering & Call forwarding or diverted to another number+ Mailing address=Virtual Office ) இவைகள் ஒரு package-ஆக Virtual Office-ல் உள்ளது. Remote Reception + Call Answering & Call forwarding or diverted to another number + Mailing address + Office Space=Virtual Office இவை ஒரு package-ஆகவும் உள்ளது. தனியாக அலுவலகங்களை திறப்பதை காட்டிலும் Virtual Office அமைப்பதற்கான செலவு குறைவு. Virtual Office சேவை அளிக்கும் பல நிறுவனங்கள் Virtual Office-ஐ மிகவும் பிரபலமான கட்டிடங்கள் (Famous Building) மற்றும் இடங்களில் (Prime Locations) அமைத்து தருவதால் மக்களிடையே ஒரு நல்ல பிம்பத்தை (Good Image) ஏற்படுத்தும். வெளிநாடுகளில் அலுவலகத்தை அமைக்க விரும்புவோருக்கு Virtual Office ஏற்றதாக இருக்கும்.

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons