venture capital
தொழில்முனைவோர்கள் முதலீடு இல்லாமல் நிறுவனத்தை வளர்க்க முடியாது. வங்கியை தாண்டி பலவற்றிலிருந்து முதலீட்டிற்கான (Funding) தொகையைப் பெறலாம். அவற்றில் ஒன்று துணிகர முதலீடு நிறுவனங்கள் (Venture Capital Firms). நாம் வருமானத்தை அதிகப்படுத்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முதலீடுகளை (investments) செய்கிறோம். பிக்ஸட் டெபாசிட் (Fixed deposit), அஞ்சலக சேமிப்பு (post office saving), தங்கம் (gold), இடம் (real estate), மியூச்சுவல் பண்ட் (mutual fund), பங்கு சந்தையில் (share market) முதலீடு என பல விதமான முதலீடுகளைச் செய்கிறோம்.
மிகப்பெரும் முதலீட்டாளர்களின் (investors) ஒருவித முதலீட்டு வகைதான் வென்ச்சர் கேபிடல். பல முதலீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை (Venture Capital Firms) ஆரம்பிப்பார்கள். வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தேர்வு செய்து அதில் முதலீடு (investment) செய்வார்கள். வென்சர் கேப்பிடல் நிறுவனம் தொழில் அதிபர்கள், மேலாண்மை நிபுணர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியவற்றை கொண்டு இருக்கும்.