பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான TrueBil முதலீட்டாளர்களிடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக பெற்றது
மும்பையைச் சேர்ந்த TrueBil தொழில்நுட்ப தொடக்க நிறுவனம் இணையதளத்தின் மூலம் பழைய கார்களை (Second-Hand cars) வாங்கி, விற்கும் தொழிலை செய்துவருகிறது Inventus Capital, Kalaari Capital, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை சார்ந்த முதலீட்டு நிறுவனமான Tekton Ventures மற்றும் Kae Capital போன்ற முதலீட்டு நிறுவனத்திடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக (Capital) TrueBil பெற்றுள்ளது.
சுராஜ் கால்வாணி, ரவி சிரன்யா, ஷுபா பன்சால், ராகேஷ் ராமன், ரிதேஷ் பாண்டே, சானு விவேக் மற்றும் ஹிமான்சு சிங்கால் ஆகியோர்களால் மும்பையில் மார்ச்,2015 ஆம் ஆண்டு TrueBil தொடங்கப்பட்டது.தொடங்கிய கொஞ்ச நாட்களுக்கு பிறகு Kae Capital முதலீட்டாளர்களிடமிருந்து 3.2 கோடி ரூபாயை மூலதனமாக (investment) பெற்றது.
PLEASE READ ALSO: Kemmons Wilson (Founder Of Holiday Inn Hotels)-ன் வெற்றிக்கான 20 யோசனைகளை
விற்கப் போகும் கார்களை பரிசோதித்து நல்ல நிலையில் உள்ள கார்களை மட்டுமே விற்பனை செய்து கொடுக்கிறார்கள். வாங்குவோர் உதவுவதற்காக ஒவ்வொரு கார்க்கும் தர மதிப்பீடை (rating) வழங்குகிறார்கள். வாங்குவோருக்கும், விற்போருக்கும் ஏற்ற விலையினை நிர்ணயித்து விற்று கொடுக்கிறார்கள். 15 நாள் விற்க உத்தரவாதம் விற்பனையாளர் வழங்கப்படும்.அந்த பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் விற்கப்படவில்லையெனில் Truebil அதை வாங்கி கொள்கிறது. இது போன்ற புதுமையான அணுகுமுறையின் மூலம் மாதத்திற்கு 200-க்கும் மேற்பட்ட கார்களை விற்று, மாதத்திற்க்கு 5 கோடி ரூபாயிக்கு மேலே விற்பனை வருவாய் ஈட்டுகிறது TrueBil டெக் ஸ்டார்ட் அப் நிறுவனம்.
PLEASE READ ALSO: 2015-ஆம் ஆண்டு அதிகப்பட்ச நிதியை முதலீடாகப் பெற்ற 7 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Highest Funded 7 Indian Tech Startups of 2015)
ஒவ்வொரு விற்றுக்கொடுக்கும் கார்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்று வருவாயை ஈட்டுகிறது. இதுமட்டுமல்லாமல் கார்களுக்கான கடன், காப்பீடு மற்றும் காகித பரிமாற்றம் (paper transfer) போன்ற சேவைகளைச் செய்து, அவற்றிலிருந்தும் வருமானத்தை ஈட்டுகிறார்கள்.
ஒவ்வொரு விற்றுக்கொடுக்கும் கார்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்று வருவாயை ஈட்டுகிறது. இதுமட்டுமல்லாமல் கார்களுக்கான கடன், காப்பீடு மற்றும் காகித பரிமாற்றம் போன்ற சேவைகளைச் செய்து, அவற்றிலிருந்தும் வருமானத்தை ஈட்டுகிறார்கள். பெற்ற மூலதன முதலீட்டை வைத்து தொழில்நுட்பம், தயாரிப்பு , 4 நகரங்களில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தப்போவதாக TrueBil டெக் ஸ்டார்ட் அப் தெரிவித்துள்ளது.