ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை பெற எதிர்பார்க்கும் முக்கிய Venture Capital நிறுவனங்கள்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் (Venture Capital Firms) முக்கிய பங்குவகிக்கின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் முதலீட்டினை வென்ச்சர் கேபிடல் நிறுவனத்திடமிருந்து பெறுகின்றன. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வென்ச்சர் கேபிடல் முதலீடு செய்கின்றன. இவ்வாறு முதலீடு செய்யும் முக்கிய வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களின் பட்டியல்.
1. Helion Venture Partners
சில்லறை வணிகம் (retail) , கல்வி (education), நிதி (financial), சுகாதார (healthcare) மற்றும் தொழில்நுட்பம் (technology product) சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு Helion Venture Partners முதலீட்டை அளிக்கின்றது. இங்நிறுவனம் $2 million முதல் $10 million வரை முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : Redbus.in, Yepme, MakemyTrip, Bigbasket.com, shopclues.com, PubMatuc, Komli, NetAmbit, TAXI For Sure, Ezetapetc.
2. Accel Partners
Accel Partners 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. Accel Partners லண்டன், நியூயார்க், இந்தியா மற்றும் சீனா போன்ற பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. இணையம், நுகர்வோர் சேவைகள் மற்றும் மென்பொருட்கள் துறையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சிறந்த வென்ச்சர் கேபிடல் நிறுவனமாகும். இங்நிறுவனம் $0.5 million முதல் $50 million வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப்க்கள் : OLA, BookMyShow, Flipkart, Myntra, JUSPAY, BabyOye, etc.
3. Sequoia Capital India
நுகர்வோர் சேவைகள் (consumer services), நிதி (financial), அவுட்சோர்சிங் (outsourcing), ஆற்றல் (energy), சுகாதார (healthcare) மற்றும் தொழில்நுட்பம் (technology) சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. Sequoia Capital India நிறுவனம் $100,000 முதல் $100 million வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப்க்கள் : JustDial, Zomato, bankbazaar.com, Practo, Knowlarity, Truecaller and iYogi
4. Inventus Capital Partners
ஹோட்டல் (Hotel), ஹாஸ்பிடாலிட்டி (hospitality), ஊடகங்கள் (media), இணையம் (internet), சில்லறை வணிகம் (retail), சுகாதாரம் (healthcare), தகவல் தொழில் நுட்பம் (information technology), வன்பொருள்(hardware), மென்பொருள் ( software) மற்றும் தொலைத் தொடர்பு (telecommunication) சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. Inventus Capital Partners $1 million முதல் $10 million வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : Savaari, Policy Bazaar.com, CBazaar, Poshmark, Farfaria, Insta Health Solutions
5. Nexus Venture Partners
மொபைல், டேட்டா பாதுகாப்பு (data security), கிளவுட் (Cloud), விவசாய தொழில்கள் (agri business), தொழில்நுட்பம், Big Data, analytics, இணையம் , அவுட்சோர்ஸ் சேவைகள் (outsourced services), உள்கட்டமைப்பு (infrastructure), ஊடகம் அல்லது நுகர்வோர் (consumer products) மற்றும் வணிக சேவைகள் (business services) துறைகளில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. Nexus Venture Partners $0.5 million முதல் $10 million வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : Snapdeal, Delhivery, Komli, Housing, PubMatic, ScaleArc.
PLEASE READ ALSO: தொழிலை விரிவுப்படுத்த வங்கியை தாண்டிய Venture Capital முதலீடுகள்
6. Blume Ventures
சிறிய முதலீட்டு தொகை தேவைப்படின் Blume Ventures நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம். இங்நிறுவனம் $0.05 million முதல் $0.3 million வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : EKI Communications, Exotel, Carbon Clean Solutions, Printo, Audio Compass
7. Zodius Capital
Zodius Capital 2011 ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. Big Data, Analytics, digital media, commerce மற்றும் education போன்ற துறைகள் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : BigBasket, ZyFin, OML, Enki Professional Holdings, Culture Machine.
8. Naspers
Naspers மிகப்பெரிய பன்னாட்டு ஊடக குழுமம் ஆகும். இ-காமர்ஸ், இணையம், அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : OLX, Flipkart, Myntra.com, Redbus.in, goibibo, PAYU, etc,.
9. IDG Ventures
IDG Ventures $1 million முதல் $10 million வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : Yatra.com, Myntra.com, FirstCity, iProf, UNBXD, Ozone, Zivame, etc,.
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra
10. Jungle Ventures
Jungle Ventures சிங்கப்பூரைச் சேர்ந்த வென்ச்சர் கேபிடல் நிறுவனமாகும். இ-காமர்ஸ் மற்றும் பகுப்பாய்வு துறையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : Zipdial, Edrolo, iMoney.my, Milaap, Pokkt, Eskop.
11. Fidelity Growth Partners
ஹெல்த்கேர், வாழ்க்கை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. Fidelity Growth Partners $10 million முதல் $50 million வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : Yebhi, Netmagic, etc,.
12. Steadview Capital
Steadview Capital ஹாங்காங் கை சேர்ந்த வென்ச்சர் கேபிடல் நிறுவனமாகும்.
முதலீட்டை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : Flipkart, Urban Ladder, Olacabs, Saavn, etc,.
இதைத்தவிர பல நிறுவனங்கள் வென்ச்சர் கேபிடல் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.
SAIF Partners, 50K Ventures, Seedfund, Qualcomm Ventures, Warburg Pincus, Bain Capital Private Equity, Canaan Partners, Axon Partners Group, Catamaran Investment Pvt Ltd, Kalaari Capital, Utthishta, Basil Partners, Ventureast Fund Advisors India Limited, Fulcrum Venture India, Ascent Capital Advisors.