இந்தியாவிலுள்ள முக்கிய 10 ஸ்டார்ட் அப் இன்குபேட்டார்கள்

Share & Like

இன்குபேட்டார்கள் தொடக்க  நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்டார்ட் அப்  வளர்வதற்கு உள்கட்டமைப்பு, வழிகாட்டி, பயிற்சி, ஆதரவு, முதலீடு போன்ற பல்வேறு உதவிகள் ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு உதவுவதற்கு இந்தியாவில் பல்வேறு   இன்குபேட்டார்கள்  (incubator) உள்ளன. தொழில்முனைவோர்கள் தங்களின் ஐடியாக்களை இன்குபேட்டார்ளில் சமர்பித்து நிறுவனம் வளர்வதற்கு தேவையான உதவிகளை பெறலாம். இந்தியாவிலுள்ள 15 முக்கிய ஸ்டார்ட் அப் இன்குபேட்டார்கள் கீழே இடம்பெற்றுள்ளன.


1.  Society Innovation and Entrepreneurship (SINE), IIT Mumbai

இன்குபேட்டார்

SINE இன்குபேட்டார் IIT, மும்பையில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு இந்த இன்குபேட்டார் தொடங்கப்பட்டது. SINE இன்குபேட்டாரில்  10,000 சதுர அடி மேல்  உள்கட்டமைப்பு அமைந்துள்ளது. ஒரு நேரத்தில் 15-17 நிறுவனங்கள் அடைகாக்க முடியும் Department of Science and Technology, Department of Information Technology மற்றும்  Technology Development Board போன்ற பல அரசு துறைகள் SINE இன்குபேட்டார்க்கு துணை புரிகின்றன.

குறிப்பிடத்தக்க ஸ்டார்ட் அப் : Webaroo, Bhugol GIS, SMSGupshup.com

இடம் : IIT,மும்பை


2.  Microsoft Ventures Accelerator
IMAGE SOURCE: E27.CO

Microsoft Ventures Accelerator Microsoft நிறுவனத்தின் இன்குபேட்டார் ஆகும். இந்த இன்குபேட்டார்  cloud services, mobile applications, urban informatics and Big Data, Internet of Things மற்றும்  wearable computing போன்றவற்றை சம்மந்தமான உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இன்குபேட்டார் சேவையை அளிக்கிறது.

Microsoft Ventures Accelerator   வழிகாட்டுதல்,  தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு நிபுணர்கள் ஆலோசனைகள், அலுவலக இடம் மற்றும் வளங்கள் போன்றவற்றை தொழிமுனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை உயர்த்த அளிக்கிறது.

குறிப்பிடத்தக்க ஸ்டார்ட் அப் : Explara, Frrole, Nowfloats, Plustxt

இடம் : பெங்களூர்

தொடங்கப்பட்ட ஆண்டு : 2012


3.  Startup Village
Image credits: entecity.com

Startup Village தொழில்நுட்பம் சார்ந்த தொழிலுக்கான இன்குபேட்டார் ஆகும்.  Department of Science and Technology, Government of India, Technopark Trivandrum மற்றும் MobME Wireless போன்றவை Startup Village இன்குபேட்டாரை ஊக்குவிக்கிறது.

Focus Area:   Technology product startups

குறிப்பிடத்தக்க ஸ்டார்ட் அப் : iTraveller

இடம் : கொச்சி 

தொடங்கப்பட்ட ஆண்டு : 2012


4.  TLabs Accelerator
இன்குபேட்டார்
Image Credits: artiwards.com

TLabs டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் குழுமமான டைம்ஸ் குழுமம் மூலம் இயங்குகிறது. பல்வேறு துறையில்  நிபுணத்துவம்  கொண்ட  100 க்கும் மேற்பட்ட வழிகாட்டிகள் (mentors) TLabs உள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டிகள் மற்றும் துவக்க முதலீட்டை வழங்குகிறது. 

Focus Area:   Internet & Mobile Startups

குறிப்பிடத்தக்க ஸ்டார்ட் அப் : Dataweave, Musicfellas, Bluegape, Gradestack, Langhar, News in Shorts

இடம் : நொய்டா  

தொடங்கப்பட்ட ஆண்டு : 2012


5.  The Startup Centre
The Startup Centre chennai
Image Credit : techinasia

The Startup Centre இன்குபேட்டார் சென்னையில் அமைந்துள்ளது. The Startup Centre இன்குபேட்டார் விஜய் ஆனந்த் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த இன்குபேட்டார் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகள், சந்தை மதிப்பீட்டு அமைத்தல், வளர்ச்சிக்கு உதவுதல் மற்றும் துவக்க முதலீட்டு நிதியை வழங்குகிறது.

Focus Area :  Tech

குறிப்பிடத்தக்க ஸ்டார்ட் அப் : Eventifier

இடம் : சென்னை  

தொடங்கப்பட்ட ஆண்டு : 2011


PLEASE READ ALSO: தொடக்க நிறுவனங்கள் வளர்வதற்கு உதவும் PayPal இந்தியாவின் Start Tank இன்குபேட்டார் சென்னையில்


6.  Centre for Innovation Incubation and Entrepreneurship (CIIE)
இங்குபேட்டார்
Image Credit : indiatoday

Centre for Innovation Incubation and Entrepreneurship (CIIE) இன்குபேட்டார் IIM, அகமதாபாதால் தொடங்கப்பட்டது. 

இடம் : அகமதாபாத்

தொடங்கப்பட்ட ஆண்டு : 2009

Focus Area – Agri, Clean Tech, Health care & etc.

குறிப்பிடத்தக்க ஸ்டார்ட் அப் : Innoz, Griddle, Rideshare, Tookitaki


7.  5Ideas
இன்குபேட்டார்
Image Credits: e27.co

இடம் : குர்கான் 

தொடங்கப்பட்ட ஆண்டு : 2012

Focus Area Internet and mobile, ecommerce, B2B/SME focused SAAS, intersection of mobile & geo, education, urban parenting, big data and ad tech

குறிப்பிடத்தக்க ஸ்டார்ட் அப் : Kartrocket


8.  GSF Accelerator
இன்குபேட்டார்
Image Credit: tctechcrunch

GSF Accelerator மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதலும், முதலீட்டு நிதியும் வழங்கப்படுகிறது. Bharatmatrimony.com நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், Shaadi.com தலைமை செயல் அதிகாரியான ,அனுபம் மிட்டல், RedBus.in நிறுவனத்தை தொடங்கியவரான பண்ணிந்தர் சர்மா, InMobi  நிறுவனர் நவீன் திவாரி போன்றோர்கள்  GSF Accelerator ஆலோசகர்களாக உள்ளனர்.

 

இடம் : குர்கான், சென்னை, பெங்களூர் 

தொடங்கப்பட்ட ஆண்டு : 2012

Focus Area :  Internet and Mobile

குறிப்பிடத்தக்க ஸ்டார்ட் அப் : Pokkt, Silverpush, Playcez, Little Eye Labs, Browntape


9.  Villgro
இன்குபேட்டார்
Image Credit: indianweb2.com

பால் பசில் என்பவரால் Villgro  தொடங்கப்பட்டது. Villgro வழிகாட்டி, நிதி மற்றும் இன்குபேட்டார் வசதியை   சமூகம் சார்ந்த கண்டுபிடிப்பு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. Villgro இந்தியாவின் பழமையான சமூக நிறுவன இன்குபேட்டார் ஆகும். கண்டுபிடிப்பாளர்கள்  மற்றும் சமூக தொழில் முனைவோர்களுக்கு ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது.

Focus Area : Healthcare, Education, Agri business and Energy.

இடம் :  சென்னை, பெங்களூர் 


10.  Indian Angel Network (IAN) Incubator

இங்குபேட்டார்

Indian Angel Network (IAN) இன்குபேட்டாரை ஏற்படுத்தியுள்ளது. National Science and Technology, Entrepreneurship Development Board, Department of Science & Technology போன்றவை Indian Angel Network (IAN) Incubator க்கு துணைபுரிகின்றது. துவக்க முதலீடு நிதி (seed funding), குழு அமைக்க உதவுதல், செயல்பாட்டு வழிகாட்டிகள், மார்க்கெட்டிங் போன்றவற்றிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது. 

இடம் :  டெல்லி

Focus Area :  E-Commerce, Education, Financial Services, Gaming, Health care, Hospitality, IT, internet, Life style, Mobile, Retail, Socila Impact and Semi Conductor. 


PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆரம்ப கட்ட முதலீட்டு நிதியை வழங்கும் Entrepreneurship & Venture Capital (EVC) முதலீட்டு நிறுவனம்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons