உங்களிடம் ஸ்டார்ட் அப் ஐடியா உள்ளதா? அப்படியென்றால் Times Now சேனல் நடத்தும் “The Vault Show”! ரியாலிட்டி நிகழ்ச்சியிலேயே உங்களுக்கான முதலீட்டை பெறுங்கள்
சமையல் போட்டி, வார்த்தை விளையாட்டு, சிரிப்பு போட்டி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் இதுதான் இன்றைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். தொழில்முனைவோருக்காக அவர்களின் ஸ்டார்ட் அப் தொழிலுக்காக Times Now மற்றும் ET Now தொலைக்காட்சி சேனல் The Vault Show என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
The Vault Show நிகழ்ச்சியில் தொழில்முனைவோர்கள் தங்களின் ஐடியாக்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை பற்றி முதலீட்டாளர்களிடம் (investors) சமர்பித்து (pitch) 1 இலட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு நிதியை (funding) பெறமுடியும்.
இந்த நிகழ்ச்சி Times Now மற்றும் ET Now தொலைக்காட்சி சேனலில் அக்டோபர் 1, 2016 முதல் ஒளிபரப்பாகும். The Vault Show நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடைகிறது.
The Vault நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்தெடுக்கும் முறை
SIGN UP
“The Vault Show” நிகழ்ச்சியில் பங்கேற்க முதல் படியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். பல ஐடியாக்களை சமர்ப்பிக்கும் போது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதிவு செய்யவேண்டும்.
THE VAULT SHOW
50 விண்ணப்பதாரர்கள் இறுதி நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இறுதிப் போட்டியாளர்களுக்கு தங்களின் ஐடியாக்களை பற்றி 6 முதலீட்டாளர்கள் முன்பு விளக்க வேண்டும். இதற்காக 5 நிமிடம் நேரம் கொடுக்கப்படும்.
இந்த நிகழ்ச்சிகள் Times Now மற்றும் ET Now சேனலில் அக்டோபர் 1 முதல் ஒளிபரப்பபடும்.
இந்தநிகழ்ச்சியில் தொழில்முனைவோர்கள் தங்களின் ஸ்டார்ட் அப்களுக்கு 1 இலட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு நிதியை (investment) முதலீட்டாளர்களிடமிருந்து பெறமுடியும்.
Please Read Also:
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை பெற எதிர்பார்க்கும் முக்கிய Venture Capital நிறுவனங்கள்