உலகையே அசத்திய 14 வயது விஞ்ஞானி : சிவா அய்யாதுரை
தொழில்நுட்ப யுகத்தில் நம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு செயலிசேவை தான் மின்னஞ்சல் (Email). ஒரு நாளுக்கு பல கோடிகணக்கான மின்னஞ்சல் பரிமாற்றம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது, முதல் முதலில் இதனை வடிவமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவதவர் ஒரு தமிழ் விஞ்ஞானி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
ஆம், மின்னஞ்சல் தந்தை சிவா அய்யாதுரை, தமிழகத்தை சேர்ந்த விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் என்ற கிராமத்தை பூர்விகமாக கொண்ட அய்யாதுரை அவர்களுக்கும், திருநெல்வேலி மாவட்ட பரமன்குறிச்சியை சேர்ந்த மீனாக்ஷி என்பவருக்கும் பிறந்த சிவா அய்யாதுரை (Shiva Ayaadurai), சிறுவயதை மும்பை மாநகரில் பள்ளி படிப்பில் தொடர்ந்தார்.
பின்னர், தன்னுடைய 7 வயதில் தன்னுடைய தந்தையின் வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்ததின் பேரில் அங்கு குடிபெயர்ந்தனர்.
அமெரிக்காவின் நகரத்திற்கு அப்பால் ஒரு சிறிய ஏழை கிராமத்தில் வளர்ந்த சிவா, தனது பள்ளி படிப்பில் சிறப்பாக செயல்பட்டார், 12-13 வயதிலேய பள்ளி பாடங்கள் அனைத்தையும் கற்று தேர்ச்சி பெற்றதால் தன தாயின் வழிகாட்டுதலின் பேரில் கணினி நிரல் மொழி பயில தொடங்கினார்! அதிலும் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற்று விளங்கினார்.
அப்போது தன் தாய் பணியாற்றிய UMDNJ என்ற மருத்துவ பல்கலைகழகத்தில் ஏற்பட்ட தகவல் பரிமாற்றம், சேமிப்பு, தொடர்பான சிக்கல் பற்றி சிவாவிடம் Dr. Leslie P. Michelson, Ph.D. என்பவரின் வழிகாட்டுதலுடன் விளக்கிய போது, அதற்கு தீர்வாக 1978-இல் உருவாகப்பட்டது தான் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் முறை, இந்த சாதனை செய்தபோது அவருக்கு வயது வெறும் 14.
தற்போதுள்ள அளவுக்கு எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் அடையாத அந்த காலகட்டத்தில் சாதனைகள் பல புரிந்திட இது ஒரு தொடக்கமாகவே இருந்தது, எவரும் வாழ்வில் சாதிக்கலாம் – அதற்கு நல்ல சூழல், நல்ல வழிகாட்டி, நம்பிக்கையான உறவுகள் மட்டுமே போதுமானது என்பார்.
1982 ஆண்டு தன் கண்டுபிடிப்புக்கு அமெரிக்க அரசிடம் காப்புரிமை பெற்றார், பின்னர் பல துறைகளில் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான MIT-யில் 4 பட்டங்கள் பெற்ற சிவா 30 வயதுக்குள்ளாகவே ஒரு பில்லியன் டாலர் நிறுவனத்தை “Echo Mail” உருவாக்கினார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு தினசரி வரும் லட்சகணக்கான அஞ்சல்களை ஒழுங்குமுறைபடுத்தி மேம்படுத்தும் போட்டியில் வெற்றி பெற்று, உலகின் தலைசிறந்த நிறுவனங்களான AT&T, Compaq, IBM, John Hancock, Lycos, Nike, and Unilever போன்ற பல நிறுவங்களுக்கு மின்னஞ்சல் சேவையை வழங்கிவருகிறார்.
EchoMail தற்போது உலகின் பில்லியன் டாலர் கம்பனிகளில் ஒன்று. இது மட்டும் இன்றி, சிவா பல்வேறு தொழில்களில் தன்னை ஈடுபடுத்தி பல சாதனைகளை செய்து வருகிறார், அதில் சமீபத்திய கண்டுபிடுப்பு தான் CytoSolve – நம் நாடு மருத்துவமான சித்தமருத்துவத்தில் தேர்ச்சி பெற்று ஒருவகையான புற்றுநோய்க்கான மருந்துகளையும் கண்டுபிடித்துள்ளார்.
Innovation can happen any where, any place by anybody என்ற தாரக மந்திரத்தை நம் நாட்டிற்கு வரும்போதெல்லாம் மாணவர்களிடன் போதிக்கும் செயலில் ஈடுபடுகிறார் சிவா இதற்காக Innovation Corps என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 16 வயதுக்கு கீழாக உள்ள மாணவர்களின் கண்டுபிடுப்புகளை அறிந்து அதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக நிதிசேவை செய்கிறார்,
இதற்கு தன் நிறுவனங்களில் வரும் லாபத்தில் முக்கிய பங்கை Innovation Corps நிறுவனத்தில் சேர்க்கிறார்.
தற்போது நஞ்சில்லா உணவு, இயற்கை வாழ்வியல் உணவு முறை, ஆரோக்கிய வாழ்வு சார்ந்த ஆராய்ச்சியிலும் போதனையிலும் ஈடுபட்டுவருகிறார்.
தொழில் முனைவோர் அனைவரும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி அதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை நீக்கி யாவரும் பயன்பெறும் வகையில் அனைவரும் முன்னேறவேண்டும் என்பதே அவரின் அறிவுரை.
சிவா அய்யாதுரை அவர்களின் நிறுவனங்கள் சில:
Echomail, Systems Health, Cytosolve, Millenium Software Productions pvt. ltd.
Social Media:
இணையத்தளம்:
Please Read Also :
தமிழர்களுக்கு பெருமைச் சேர்த்த ஆஸ்கார் நாயகன் கோட்டலங்கோ லியோன்