டீ மற்றும் காபிகளை காப்ஸ்யூல்களாக விற்பனை செய்யும் Bonhomia நிறுவனம் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து $1 மில்லியன் டாலர்களை முதலீட்டாக பெற்றுள்ளது
டில்லியை சேர்ந்த டீ மற்றும் காபிகளை காப்ஸ்யூல்களாக (capsules) தயாரித்து விற்பனை செய்யும் Bonhomia நிறுவனம் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து (Angel Investor) $1 மில்லியன் டாலர்களை முதலீட்டாக பெற்றுள்ளது. FGWilson நிறுவனத்தின் தலைவர் அலோக் ராவத், Kae Capital-ஐ சேர்ந்த நீத்தா மிர்ச்சண்டனி, Fireside Ventures தொடங்கிய கன்வல்ஜித் சிங் போன்றோர்கள் Bonhomia நிறுவனத்தில் $1 மில்லியன் டாலர் முதலீட்டை செய்துள்ளனர்.
Bonhomia நிறுவனம் வறுத்த காபிக் கொட்டைகள், காபிக் கொட்டைகளை காப்ஸ்யூல்கள் வடிவத்திலும் மற்றும் டீ போன்றவற்றை Bonhomia Boho என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்கிறது. சில்லறை விற்பனையை இ-காமர்ஸ் நிறுவனமான Snapdeal, Fab-Mart மூலமும், இ-காமர்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமான Modern Bazaar and Godrej Nature’s Basket மற்றும் பல நிறுவனங்கள் மூலம் டீ மற்றும் காபி பொருள்களை விற்பனை செய்து வருகிறது. ஹோட்டல் குழுமம்மான தாஜ் ஹோட்டல் இதன் வாடிக்கையாளராக உள்ளது.
2012-ஆம் ஆண்டு டில்லியில் குணால் பகத் (Kunal Bhagat), துஹின் ஜெயின் (Tuhin Jain) என்பவரால் Bonhomia நிறுவனம் தொடங்கப்பட்டது. Bonhomia பெற்ற இந்த முதலீட்டை வைத்து அதன் சில்லறை விற்பனை விரிவாக்கம், உற்பத்தி திறன்களை அதிகரிப்பு, திறமையான குழு விரிவாக்கம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1 இலட்சம் காபி காப்ஸ்யூல்களை விற்பனை செய்துள்ளது.
ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு $2 மில்லியன் டாலர்களை முதலீட்டாக பெற்றது குறிப்பிடத்தக்கது.
PLEASE READ ALSO: DesignBids நிறுவனம் Indian Angel Network-யிடமிருந்து முதலீட்டு நிதியை பெற்றுள்ளது