தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் அமெரிக்க நாட்டிற்கான வர்த்தக விசா மற்றும் பணி விசா பெறுவதற்கான நடைமுறைகள் குறித்த கூட்டம் வரும் மார்ச் 1 மதுரையில்
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு வர்த்தகப் பயணம் செய்வதற்கு தேவையான வர்த்தக விசா மற்றும் அங்கு வேலை செய்வதற்கு தேவையான பணி விசா பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்தான பயனுள்ள கூட்டம் வரும் மார்ச் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.
சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தூதரக அதிகாரி D.B.Gates அவர்கள் அமெரிக்க வர்த்தக விசா மற்றும் பணி விசா பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை வழங்கவுள்ளார்.
இந்த கூட்டம் வரும் மார்ச் 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மதுரை காமராஜர் சாலையில் உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் மெப்கோ மினி ஆடிட்டோரியத்தில் (Chamber of commerce Mepco mini Auditorium) நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மதுரையை அணுகலாம். தொலைபேசி எண் : (0452) 2626751 / 2626752.
PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்