சுகாதார தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவுவதற்காக Accelerator திட்டத்தை ஏப்ரலில் தொடங்குகிறது T-HUB இன்குபேட்டார்
ஸ்டார்ட் அப் இன்குபேட்டார் T-HUB அமைப்பு சுகாதார தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Health Tech Startups) வளர்ச்சிக்கு உதவுவதற்காக Accelerator திட்டத்தை ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது. Merck and Microsoft Ventures நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்திற்கு T-HUB சுகாதார தொழில்நுட்பம் புதுமை முடுக்கம் (T-Hub Health Tech Innovation Accelerator) என்று பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கை அறிவியல் (life sciences) மற்றும் உயிரியல் (bio-tech) தொடர்புடைய 12 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வளர்ச்சிக்கும் உதவ திட்டமிட்டுள்ளது.
PLEASE READ ALSO: பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான TrueBil முதலீட்டாளர்களிடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக பெற்றது
தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க நிறுவனங்களுக்கு நிபுணர்களை கொண்டு வழிகாட்டுதல், முதலீடு நிதிக்கு முதலீட்டு நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற உதவிகளை T-HUB செய்யும்.
T-Hub Health Tech Innovation Accelerator திட்டத்திற்கு ஜனவரி வரை 1600 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.