SBI IT Innovation Start-up Fund : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி நிதி தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்களில் (fintech startups) ரூ .200 கோடி நிதி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது
நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதி தொழில்நுட்பம் ((financial technology (fintech)) சார்ந்த ஸ்டார்ட் அப்களில் ரூ .200 கோடி நிதி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சம் ரூ 3 கோடி வரை முதலீடு உதவியை அளிக்கும். வங்கி மற்றும் அதை சார்ந்த நிதி தொழில்நுட்பத்தில் உள்ள ஸ்டார்ட் அப்கள் புதுமையை புகுத்தி மேம்படுத்துவதற்காக இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது.
IT Innovation Start-up Fund மொத்த முதலீடு 200 கோடி ஆகும் என எஸ்பிஐ (SBI) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா (Arundhati Bhattacharya) புது தில்லி நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (CII Banking Tech summit) நிகழ்வில் கூறினார். ஏற்கனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வங்கி தேவைகளை நிறைவுச் செய்ய SBI வங்கி SBI InCube பிரேத்தியேக கிளையை பெங்களூரில் தொடங்கியது.
SBI வங்கி ஸ்டார்ட் அப் களுக்கு உதவ ஒரு வழிகாட்டுதல் குழுவை (mentoring team) அமைத்துள்ளதாக அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார். இந்த குழு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், கண்காணித்தல் மற்றும் முன்னேற்றம் குறித்த ஒரு அறிக்கையை உருவாக்குதல், முதலீட்டு நிதியை பயன்படுத்த வழிகாட்டுதல், கூடுதல் முதலீட்டை பெறுதல் போன்ற பல பகுதிகளுக்கு உதவிகளை வழங்கும். தேவைப்பட்டால் வெளி சட்ட மற்றும் நிதி உதவி இந்த குழு வழங்கும் என அருந்ததி பட்டாச்சார்யா மேலும் தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வங்கி தேவைகளை நிறைவுச் செய்ய தொடங்கப்பட்ட SBI வங்கி SBI InCube பிரேத்தியேக கிளையில் 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please Read Also:
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வங்கி தேவைகளை நிறைவுச் செய்யும் SBI வங்கியின் SBI InCube பிரேத்தியேக கிளை
ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான வங்கித் தீர்வுகளை கொடுக்கும் HDFC SmartUp