ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீட்டை பெற தேவையான நடைமுறைகளை செய்து கொடுக்கிறது Startup CFO’s
தொழில்முனைவோருக்கு ஸ்டார்ட் அப் (Startup) ஐடியாக்கள் சிறந்ததாகவும், வருமானம் (Revenue) ஈட்டக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் ஸ்டார்ட் அப் திட்டத்திற்கு முதலீட்டை (investment) பெறுவதற்கான ஆவணங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் என்ன? அதை எப்படி தயார் செய்வது? முதலீட்டாளர்களிடம் (Investor) நமது ஸ்டார்ட் அப் திட்டங்களை எப்படி சமர்பிப்பது? முதலீட்டை பெறுவதற்கான நடைமுறைகள் (Procedures) என்ன? முதலீட்டாளர்களிடம் நமது ஸ்டார்ட் அப் திட்டத்தை எப்படி முன்னிலைப்படுத்துவது? முதலீட்டாளர்கள் தொழில் முனைவோரிடம் எதிர்பார்ப்பது என்ன? என்பது போன்ற பல விஷயங்கள் தொழில்முனைவோருக்கு சந்தேகங்களும், நடைமுறைகளை தயார் செய்வதில் சிரம்மமும் இருக்கும்.
தொழில்முனைவோர்கள் தங்களின் ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களுக்கு முதலீட்டை (funding) பெற தேவையான நடைமுறைகளை (procedures) மும்பை, தானேவை சேர்ந்த Startup CFO’s என்ற நிறுவனம் செய்து கொடுக்கிறது. தொழில்முனைவோர்களிடமிருந்து முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை Startup CFO’s செய்து கொடுக்கிறது.
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை பெற தேவையான ஆவணங்கள் (documents), முதலீட்டாளர்களிடம் தங்களின் நிறுவனத்தைப் பற்றி விளக்கும் வகையான கோப்புகள் (presentation material), எப்படி முதலீட்டாளர்களிடம் தங்களை பற்றி வழங்குவது போன்ற நடைமுறைகளை Startup CFO’s செய்துகொடுக்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு Startup CFO’s வழங்கும் சேவைகள்
தொழில் மாதிரி (Business Financial Model) மற்றும் தொலைநோக்கு திட்டம் (Forecasting) ஆகியவை தயார்செய்வது, போட்டியாளர் பகுப்பாய்வு (Competitor Analysis) செய்ய உதவுதல், தொழில் துறையின் மொத்த சந்தை மதிப்பை (Market Sizing) கண்டறிவது, முதலீட்டை முதலீட்டாளர்களிடம் தேடும்முன் ஸ்டார்ட் அப் ஐடியாவை சந்தையில் தேவை இருப்பதை சரிபார்க்க உதவுதல் (Idea Validation), ஸ்டார்ட் அப்க்கு எவ்வளவு முதலீடு தேவைபடுகிறது என்பதை மதிப்பிடுவது (Valuations), முதலீட்டை பெறுவது மற்றும் ஸ்டார்ட் அப்பை முதலீட்டாளர்களிடம் விளக்குவதற்கு (Presentation) தேவையான ஆவணங்களை (documents) தயார் செய்து கொடுப்பது, ஸ்டார்ட் அப் நிருவனங்களுக்கு ஆரம்பம் முதல் முதலீட்டைப் பெரும் வரை ஊக்கத்தையும், ஆதரவையும் (support) Startup CFO’s கொடுக்கிறது.
இணையத்தள முகவரி : Http://StartupCFOs.in/