ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்னையில் ஒன்று கூடி ஆனந்தமாய் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ திருவிழா
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும், “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் முழங்கிய பொங்கல் என்பது தமிழர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல் பண்டிகை தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவான பொங்கலை, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் ஒன்று கூடி கொண்டாடப் போகிறார்கள்.
ஸ்டார்ட் அப் பொங்கல்
‘ஸ்டார்ட் அப் பொங்கல்’ விழா சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், அதன் நிறுவனர்களும் ஒன்று கூடி ஆனந்தமாய் கொண்டாடும் ஒரு திருவிழா. இந்த கொண்டாட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நடைப்பெற உள்ளது.
பொங்கல் நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வது போல, ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகத்தையும், நட்பையும் ஏற்படுத்திக்கொள்ளவும், தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் இந்த ஸ்டார்ட் அப் பொங்கல் விழா உதவும்.
இவ்விழாவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் கள் கலந்துகொள்ள உள்ளனர்.
பாரம்பரிய நிகழ்ச்சிகள்
ஸ்டார்ட்-அப் பொங்கல் (Startup Pongal) விழாவில் பாரம்பரிய இசை மற்றும் நடனம், தமிழர் விளையாட்டுகளான கபடி, பம்பரம், கோலி, கிட்டிப் புள்ளு, நொண்டி, உறியடி, பாண்டி ஆட்டம், மாட்டு வண்டி சவாரி, பொங்கல் சமைப்பது, தமிழ் பாரம்பரிய உணவுகள் மற்றும் பல வேடிக்கையுடன் கூடிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெறும். ஒரு உண்மையான பாரம்பரிய கிராம அனுபவத்தை கொடுக்கும் நிகழ்ச்சியாக அமையவுள்ளது.
நிகழ்வில் பங்கேற்க
‘ஸ்டார்ட் அப் பொங்கல்’ விழாவில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனர்கள் உடனடியாக கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்தி உங்கள் டிக்கெட்டை பெற்று கொள்ளலாம்.
For Ticket : https://in.explara.com/e/startup-pongal
Website : http://www.startuppongal.com/
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: Mr.Suresh – 97109 31622 or Mr.Praveen – 89392 15686
பண்பட்ட கலாச்சாரத்தின் விதைகளை ஆழமாக உழுது வைக்க ஸ்டார்ட் அப் பொங்கல் நிகழ்வில் ஒன்றிணைவோம்.