ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் முதல் மாதத்தில் 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவுச் செய்துள்ளன
தொழில்முனைவோரை முன்னேற்றும் வகையில் Startup India (ஸ்டார்ட் அப் இந்தியா) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஜனவரி 16-ல் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் எளிதாக பதிவு செய்வதற்காக உதவ என்ற http://startupindia.gov.in/ இணையத்தளம் (online portal) மற்றும் Mobile application போன்றவை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டன.
மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா தளம் தொடங்கப்பட்ட ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் திட்டத்தில் பதிவுச் செய்துள்ளன. தொழில் துவங்குவதற்கு உதவுவதற்காக ரூ.2500 கோடியை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது. இன்குபேட்டார் (incubators) வசதிகள் பற்றிய தகவல்களை வழங்குவது, அனைத்து அம்சங்களிலும் வழிகாட்டுவது (mentorship), அறிவுசார் சொத்து உரிமைகள் (intellectual property rights (IRP)) சம்மந்தமாக உதவுவது, முதலீட்டை (Funding) பெற உதவுவது போன்றவை ஸ்டார்ட் அப் இந்தியா தளத்தின் மூலம் பெறலாம்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் பதிவு செய்யும் தொடக்க நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி (tax) சலுகைகள் கிடைக்கும்.