தொடக்க நிறுவனங்கள் வளர்வதற்கு உதவும் PayPal இந்தியாவின் Start Tank இன்குபேட்டார் சென்னையில்
தொடக்க நிறுவனங்கள் வளர்வதற்கு உள்கட்டமைப்பு, வழிகாட்டி, முதலீடு, பயிற்சி, ஆதரவு போன்ற பல்வேறு உதவிகள் ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு உதவுவதற்கு பல்வேறு இன்குபேட்டார்கள் உள்ளன. இன்குபேட்டார்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆரம்ப கட்டத்தில் உதவுவதற்காக பேபால் இந்தியாவின் (PayPal India) Start Tank Incubator சென்னையில் உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வழங்குதல், தொழில்நுட்பம் மற்றும் தொழிலில் வழிகாட்டுதல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் இணைத்தல், வாடிக்கையாளர்களை அணுக உதவி செய்தல், தேவையானவற்றிக்கு பயிற்சி அளித்தல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை சந்தைபடுத்துதல் மற்றும் பிராண்டின் மூலம் பிரபலப்படுத்துதல் மற்றும் பல ஆதரவுகளை வழங்குகிறது.
PLEASE READ ALSO: தமிழில் மென்பொருள்கள் உருவாக்குவதற்கு உதவி செய்கிறது தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (TAMIL SOFTWARE INCUBATION CENTER)
தேர்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு Start Tank Incubator ஒரு வருட காலம் வரையில் உதவிகளை வழங்குகிறது. Start Tank Incubator–ல் மிகவும் திறமையான, அனுபவமுள்ள வழிகாட்டிகள் (Mentors) உள்ளன.

Konotor, DO PART TIME, Kobster, Fantain, PiQube Analytics போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் Start Tank Incubator மூலம் பயனடைந்த நிறுவனங்களாகும். CashFree, D-Rewards, FtCash, Notifie போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்போது Start Tank Incubator–ல் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவிகளை பெற்று வருகிறது.