உணவுப்பொருட்களை பதப்படுத்த உதவும் SOLAR DRYER தொழில்நுட்பம்

Share & Like

SOLAR DRYER

 உணவு மற்றும் விவசாய பொருட்கள் அதிகமாக வீணாகக்கூடிய இன்றைய காலக்கட்டத்தில் அதை நீண்ட நாட்கள் கெடாமல் பதப்படுத்தி பாதுகாத்து வைப்பது மிகவும் அவசியமானது.

உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க நாம் பல பதப்படுத்துதல் முறைகளை கையாள்கிறோம். அதில் குறிப்பாக குளிர்பதனம் மூலம் கெடாமல் பாதுகாப்பது மற்றும் வெயிலில் மூலம் பதப்படுத்தி பாதுகாப்பது. இதில் குளிர்பதன முறையை விட வெயிலில் பதப்படுத்துவதுதான் உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். உதாரணமாக நாம் இன்றும் செய்யும் மாங்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல்,சுண்டக்காய் வற்றல், மிளகாய் வற்றல், சில ஊறுகாய் வகைகள், கருவாடு போன்றவை வெயிலின் மூலம் பதபடுத்தி பாதுகாக்கும் முறைகளாகும். இதேபோல் பல உணவுப் மற்றும் விவசாய பொருட்களை வெயிலின் வெப்பத்தின் மூலம் பதப்படுத்தி பாதுகாக்கப்படுகின்றன. இது ஒரு வகையான மதிப்பு கூட்டுதல் முறையாகும்.

வெட்ட வெளியில் வெயிலில் காயவைப்பதால் ஏற்படும் தீமைகள்:

வெட்ட வெளியில் வெயிலில் காயவைக்கும் போது பலவித பிரச்சனைகள் உள்ளன. காற்றிலிருந்து வரும் மாசு, தூசி போன்றவை உணவுப் பொருட்களில் படிதல், பூச்சிகளின் தொல்லை, பூஞ்சைகள் தாக்கக்கூடிய வாய்ப்பு, அதிகமான ஈரப்பதம், பறவைகளின் மூலம் ஏற்படும் பொருட்களின் இழப்பு, பறவைகளின் எச்சம், இறக்கைகள் பொருட்களில் படித்தல், வெப்பத்தின் அளவு அடிக்கடி மாறுபடுவதால் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுவை குறைதல், திடீர் மழையின் மூலம் பொருட்களில் சேதாரம் ஏற்படுதல் போன்றவை வெட்ட வெளியில் பதப்படுத்தலில் உள்ள பிரச்சனைகள் ஆகும்.

SOLAR DRYER-ன் செயல்முறைகள்:

வெயிலின் வெப்பத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த இப்போது SOLAR DRYER என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. SOLAR DRYER தொழில்நுட்பத்தில் சூரிய வெப்பத்தை உள்வாங்க Solar Panel பயன்படுத்தப்படுகிறது. SOLAR DRYER-ல் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள ஒரு கூடாரம் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த கூடாரம் Poly Carbonate மூலம் செய்யப்பட்டுள்ளது. கூடாரத்தின் அளவு நம் தேவைக்கு ஏற்ற அளவுகளில் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். Solar Panel-களின் மூலம் சூரிய வெப்பம் உட்கிரகிக்கப்பட்டு இந்த கூடாரத்தில் செலுத்தப்படுகிறது. சூரிய வெப்பத்தின் அளவு சுமார் 50 டிகிரியில் இருக்குமாரு இதில் அமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் அளவை தீர்மானிக்க ஒரு Sensor இதில் பொருத்தப்பட்டிருக்கும். வெப்பத்தின் அளவு 50 டிகிரிக்கு கீழே குறைந்தால் SOLAR DRYER-லில் பொருத்தப்பட்டிருக்கும் Heater மூலம் வெப்பம் அதிகரிக்கப்படுகிறது. இதேபோல் வெப்பத்தின் அளவு 50 டிகிரிக்கு மேலே அதிகரித்தால் SOLAR DRYER-யில் பொருத்தப்பட்டிருக்கும் COOLER மூலம் குளிர் காற்று செலுத்தப்படுகிறது. இந்த செயல் முறைகள் தானாக நடைபெருமாறு தானியங்கி (Automation) தொழில்நுட்பம் SOLAR DRYER-யில் பயன்படுத்தப்படுகிறது.

SOLAR DRYER-யில் பதப்படுத்தும் பொருட்களை வைப்பதற்கு பல Tray-க்கள் பயன்படுத்தப்படுகிறது. கூடாரத்தின் உள் வெப்பம் அதிகமாக இருப்பதால் பதபடுத்தும் பொருட்களை கூடாரத்தில் நின்று பொருட்களை வைப்பது சிரமாக இருக்கும் என்ற காரணத்தினால் இந்த Tray க்கள் பயன்படுத்தப்படுகிறது. SOLAR DRYER அமைக்கப்பட்டிருக்கும் தரையின் நிறம் கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

SOLAR DRYER-ன் நன்மைகள்:

  • சீரான வெப்பநிலை பாரமரிக்கப்படுவதால் பதப்படுத்தும் பொருட்களின் சுவை அதிகரிக்கிறது.
  • பதப்படுத்தும் பொருட்களின் தரம் அதிகரிக்கிறது,
  • நிறம் ஒரே மாதிரியாக காணப்படுகிறது,
  • பறவைகளின் மூலம் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது,
  • பூஞ்சைகளின் தாக்குதல் இருக்காது,
  • பூச்சிகளின் தொல்லை இருக்காது,
  • காற்றின் மாசுக்கள் பொருட்களில் படியாது,
  • திடீர் மழையினால் எவ்வித பொருட்கள் சேதாரமும் ஏற்படாது,

SOLAR DRAYER-ன் விலை மற்றும் அரசு மானியங்கள்:

சுமார் 700 சதுர அடி கொண்ட ஒரு SOLAR DRAYER-ஐ அமைக்க ரூபாய் 7 இலட்சம் செலவாகலாம். இது அமைக்கும் நிறுவனத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடும். SOLAR DRAYER-ஐ அமைக்க அரசு 50 % சதவிதம் மானியம் அளிக்கிறது. உதாரணமாக ஒரு SOLAR DRAYER-ஐ அமைக்க ரூபாய் 7 இலட்சம் செலவாகிறதென்றால் அரசு மானியமாக ரூபாய் 3.5 இலச்சத்தை மானியமாக அளிக்கிறது.

SOLAR DRAYER-ல் மூலம் பதபடுத்தக்கூடிய பொருட்கள் :

solar dryer

   பல்வேறுப்பட்ட பொருட்களை SOLAR DRAYER-யில் பதப்படுத்தலாம். இப்போது வெங்காயம் (Onions), தக்காளி (Tomatoes), மாங்காய் (Mango), உருளைகிழங்கு (Potato), நெல்லிக்காய்(Amla), பாகற்காய், கொத்தவரங்காய், பலவித மூலிகை பொருட்கள் (Ayurvedic Herbs) குறிப்பாக ஸ்பையிரிலூன (Spirulena), காளான் (Mushrooms) , கருவாடு (Drying Fish), இறால் (Prawn), நண்டு ( Shrimps) மேலும் பல பொருட்கள் SOLAR DRAYER-ல் காயவைத்து பதப்படுத்தப்படுகின்றன.

SOLAR DRAYER-ல் காயவைத்து பதப்படுத்தப்படுத்திய பொருட்களின் தரம் மற்றும் சுவை அதிகமாக இருப்பதால் சந்தையில் அதன் தேவையும் விலையும் அதிகமாக இருக்கிறது .

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons