service tax
ஜூன் 1 முதல் புதிய சேவை வரி 14.5% லிருந்து 15% ஆக உயர்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 0.5% கிருஷி கல்யாண் செஸ் (Krishi Kalyan Cess) வரி, சேவை வரியுடன் சுமத்தப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இந்த வரி விதிப்பு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன் படி 14.5% ஆக இருக்கும் சேவை வரி (service tax) 15% ஆக உயர்கிறது.
0.5% கிருஷி கல்யாண் வரி (Krishi Kalyan Cess) முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக பயன்படுத்தப்படும். இந்த செஸ் வரி வேறு எந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த மாட்டாது.


